பக்கம்:தமிழக வரலாறு.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால சோழர் எழுச்சி

267


வேளை இவன் வென்றிருக்கக் கூடும். அங்கு வாழ்ந்த சம்புவராயர் தம்மை விராட்சதர் என்றே கூறிக்கொள்ளுகின்றனர்.[1]

பாண்டிய நாட்டில் பெருவீரனான இரண்டாம் சுந்தர பாண்டியன் 1251ல் பட்ட த்துக்கு வந்தான். 1257ல் இவன் சோழ நாட்டின்மேல் படையெடுத்து வென்று இராசேந்திரனைச் சிற்றரசனாக்கினான். பல நாட்டு மன்னரை வென்று பாண்டிய நாட்டு எல்லையைப் பெருக் கினான் இவன் சோழர் ஆட்சியும் பாண்டியருக்கு இடம் விட்டு அமைதியுற்றது எனலாம். இராசேந்திரன் கல்வெட்டு ஒன்று 33-ஆம் ஆட்சி ஆண்டில் உள்ளது. எனவே, இவன் 1276 வரை ஆண்டான் எனலாம். இவன் கலை நகரும் கங்கை கொண்ட சோழபுரமேயாகும் பட்டத் தரசி இயற்பெயர் தெரியவில்லை. அவள் சோழ குலமா தேவி என்று வழங்கப் பெற்றாள். இவன் மக்களைப் பற்றிய குறிப்பு ஒன்றும் விளங்கவில்லை. இவன் காலத்துக்குப் பின் சோழ நாடு பாண்டிய நாட்டோடு இணைந்துவிட, பாண்டியர் ஆட்சி ஒங்கிற்று.

சோழர் வீழ்ச்சி:

இவ்வாறு விசயாலயன் ஆட்சிக் கால முதல் சிறத்தோங்கி நாட்டின் நலம்புரந்த சோழர் ஆட்சி இத்துடன் முடிவுற்றது. அதற்குப் பிறகு அது தலை எடுக்கவில்லை என்பது கண்கூடு. இவ்வாறு சோழர் பரம்பரை அழிந்து விட்டாலும், அவர்கள் செய்த பணிகளும் விட்டுச்சென்ற சின்னங்களும் இன்றும் நம்முன்னின்று அவர்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன. அவர்கள் காலத்தில் தமிழ்நாட்டு நிலையைக் கானின், அவர்கள் செய்த தொண்டின் சிறப்பு நன்கு விளங்கும் எனவே, அவர்கள்

காலச் சோழ நாட்டைக் காணலாம்.


  1. 1

1. சோழர் வரலாறு II பண்டாரத்தார்.. பக்.209

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/269&oldid=1357985" இலிருந்து மீள்விக்கப்பட்டது