பக்கம்:தமிழக வரலாறு.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலத்துத் தமிழகம்

269


தமிழரசர்கள் அடையாத சிறந்த பட்டங்களைப் பெற்று ஆண்டார்கள். அரசர் சக்கரவர்த்திகள் என்றும் அரசியர் திரைலோக்கிய மாதேவி, அவனி முழுதுடையாள் என்றும் பட்டங்களைப் பெற்றிருந்தமையே சோழர் மிகப்பரந்த நிலப்பரப்பை ஆண்டவர் என்பதையும் அவர்களின் கீழ்ப் பல சிற்றரசர்கள் இருக்கச் சக்கரவர்த்திகளாய் விளங்கினர் என்பதையும் விளக்கும். அவர்கள் தலைநகர்களாகத் தஞ்சையையும் கங்கைகொண்ட சோழபுரத்தையும் கொண்டிருந்தனர் எனினும், துணைத் தலைநகர்களாகக் காஞ்சிபுரமும் பழையாறையும் உடன் விளங்கின. அவர் கள் காலத்தில் நாகைப்பட்டினம் வாணிபத்தை வளர்த்த துறைமுகப்பட்டினமாய் இருந்திருக்க வேண்டும்.

அரசர் தனி வாழ்க்கை:

அரசர் தனி வாழ்வில் நாம் காண்பன ஒரு சில. அரச மாளிகையில் தனித்தனி சிறப்புப் பணியாளர் பலரும் இருந்தனர். சோழர்கள் விருந்து புரந்தோம்பும் பண்பில் அடிக்கடி விருந்தளித்து வந்தனர். இக்காலத்தில் பிற நாட்டுத் தூதுவர்கள்-அரசினர் விருந்தினராகத் தங்கி இருப்பது போன்று அக்காலத்தும் பல தூதுவர் வந்து விருந்தினராய்த் தங்கியிருந்திருப்பர். இந்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குத் தூதுவர் சென்றனர் என மேலே கண்டோம். அதே நிலையில் பல நாட்டுத் தூதுவர் இங்கே வந்த தங்கியிருந்திருப்பர். அவர்களுக்கெல்லாம் அரச மாளிகையில் விருந்து நடைபெற்றிருக்கும். அக்காலத் தில் பல வெளிநாடுகளுடன் தமிழ்நாடு அரசியல் உறவு, வாணிபம், கலை முதலிய பல வகையில் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தமையின், வெளிநாட்டு மக்கள் அடிக்கடி வந்திருப்பார்கள். அந்த விருந்துகளிலெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/271&oldid=1358005" இலிருந்து மீள்விக்கப்பட்டது