பக்கம்:தமிழக வரலாறு.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

தமிழக வரலாறு



களுக்கு உதவி புரிந்து, மக்கள் எண்ணங்களை அரசனுக்கு உணர்த்துபவராவர் என ஆய்ந்து விளக்குகின்றனர்.

வழக்கு முறை:

நீதியைப் பற்றிய கல்வெட்டு ஒன்றும் திட்டமாக இல்லையாயினும், சில தானக் கல்வெட்டுக்களை நோக்கின், பாவஞ்செய்வார் மிகக் கடுமையாகத் தண்டிக் கத்தக்கவர் என்பது தோன்றும் மற்றும் அக்காலத்தில் பெரிய புராணம் போன்ற இலக்கியங்களின் வழி நாட்டில் மக்கள் எப்படி நீதி பெற்றார்கள் என அறியலாம். நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் ஊர்ச் சபைகளே அவ்வவ்வூரின் பழக்க வழக்கங்களுக்கும் நியதிக்கும் முறைக்கும் ஏற்ப நீதி வழங்கின. ஆகையால், அப்பொறுப்பை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆட்சி, நீதி வழங்கும் நெறி இரண்டையும் ஒருவரே ஏற்றல் சிறக்காது என்ற உண்மையை இன்றைய அரசாங்கத்தாரும் உணர்ந்து வருகின்றார்களே!

அக்காலத்தில் உரிமை, குற்றம்[1] என்ற வேறுபாடு நீதியில் காணப்படவில்லை. தவறு செய்பவரைத் தண்டிக் கும் முறை ஊர்ச்சபையினிடமிருந்தது. தவறுகளைக் காணப் பல வழித்துறைகள் இருந்தன. பெரியபுராணத்தில் சுந்தரருக்கும் முதியவருக்கும் நடந்த வழக்கினை வெண்ணெய்நல்லூர் வேதியர் தீர்த்து வைத்தமுறை ஒரு சிறந்த சான்றாகும். அது இக்காலத்து உரிமை வழக்குப் போன்றதே அதை எண்ணி உண்மை உணரும்வழியில் "ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்


  1. l. The Cholas-Vol. II p. 254 2. Civil and Criminal
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/276&oldid=1358034" இலிருந்து மீள்விக்கப்பட்டது