பக்கம்:தமிழக வரலாறு.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலத்துத் தமிழகம்

277


அனைவரும் ஏற்றுக் கொள்வர். அறிஞர் காய்தல் உவத்தல் இன்றி ஒவ்வொரு பொருளையும் நன்கு ஆராய்ந்து விளக்குவர்.

ஊர்ச் சபைகளே அனைத்தையும் நடத்துவதால் வரி வசூலிக்கும் பொறுப்பையும் அச்சபைகளிடமே ஒப்படைத்திருந்தனர். அச்சபைகள் சில மாற்றங்கள் வரி விதிப்பில் வேண்டுமாயினும் மேற்கொள்ளலாம். பொதுவாக வழக்கத்தில் வரும் வரிகளைத் தவிர்த்துப் புதுவரிகளை விதித்தால், அவ்வரியால் பாதிக்கப் படுபவரை அழைத்து விசாரித்தே நன்மை தீமை அறிந்து வரி விதிப்பர். செலவு வகையில் படைச் செலவே அதிகம். அரசனுடைய தனிச் செலவும் அதிகம். வரிகளுக்குச் சில நல்ல பெயர்களைத் தேர்ந்து அமைத்துள்ளனர். ஆயம் (Revenue), குடிமை (Tenancy dues) இறை (Minor dues) சித்தாயம் (Income Tax) போன்ற வரிகளைக் காலம் கருதிப் பயன் கருதிக் கழிப்பதும் உண்டு. வரியற்ற இனாம் நிலங்களும் இருந்தன.

நில அளவுகள்:

பிற்காலச் சோழர் காலத்தில் மூன்று முறை நிலங்கள் அளக்கப் பெற்றன. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறையாயினும் நிலத்தை அளந்து (Survey) ஒழுங்கு படுத்தும் நிலை போற்றக்கூடியதன்றோ! அளந்து, நீர்ப்பாசனம், விளைவு, பிறவகைப் பாகுபாடுகளை ஒட்டி அவற்றிற்கு வரி இடுவார்கள் பயிரிடும் நிலம்போக, பொதுப்பயனுக்காக ஊர் நத்தம், அரசாங்கத்துக்குரிய புறம்போக்கு, பறைச்சேரி. கம்மாளச்சேரி முதலிய இடங்களை வரியிலிருந்து விலக்கியிருந்தனர். விதித்த வரியை வசூலிப்பதற்குக் குடிகளைக் கொடுமைப் படுத்துவது இல்லை. ஒரு கல் வெட்டு, வரி வசூலிக்கக் கொடுமைப் படுத்திய ஓர் அதிகாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/279&oldid=1376182" இலிருந்து மீள்விக்கப்பட்டது