பக்கம்:தமிழக வரலாறு.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

தமிழக வரலாறு



கம் செய்ததாகவும், மயிலாப்பூரிலிருந்து தஞ்சைக்குச் சென்று வியாபாரம் சேய்ததாகவும் ஈழநாட்டிலிருந்து சுசீந்திரம் வந்து வியாபாரம் செய்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன. பல்வேறு பொருள்கள் வாணிகப் பொருள்களாய் இருந்தன. உப்பெடுத்து வாணிகம் செய்தனர். அரசருக்கும் மற்றவருக்கும் உதவும் ஆடை வாணிகமும் இருந்தது. வாணிகத்தை நேரிய முறையில் நடத்திவந்தனர். தவறின், கோயிலுக்குத் தீர்வை கட்டவேண்டும் என்ற நியதி இருந்தது.

வாணிகம் சிறந்திருந்தமையின், நல்ல போக்கு வரவுச் சாலைகளும் இருந்தன. அவற்றின் வழி, வாணிகம் புரிவோர் கூட்டு வாணிக முறையிலும் தனி முறையிலும் தங்கள் தொழிலைப் பெருக்கிக்கொண்டனர் எனலாம் சில வாணிக முறைகள் முழு உரிமையோடு நடை பெற்றன. சிலர் உரிமையற்றிருந்தனர். இன்றும் வாணிகம் செய்ய உரிமை பெற அரசியலார் வரி விதிப்பது போன்று அன்றும் சில வாணிகத்துக்கு வரி விதிப்பு இருந்தது எனலாம். இன்றைய வணிகர் போன்று அன்று பொருளாதார உயர்வு ஒன்றையே அரசாங்கமோ தனிப்பட்டவரோ கருதவில்லை எனலாம். வாணிகக் குழுக்கள் (chamber of commerce) இக்காலத்தில் உள்ளன போன்று பல இருந்தன. சுங்கமும் உண்டு. கடனுக்காகப் ‘பாண்டு' எழுதும் வழக்கமும் இருந்தது. நூற்றுக்கு 12 வீதம் வட்டி வாங்கினார்கள் நினைக்க முடியாத பெரிய அளவுக்கு நூற்றுக்கு ஐம்பது வீதம் வட்டி முறையும் இருந்தது. வட்டி பொருளாகவும் தானியமாகவும் வாங்கப் பெற்றது. சொத்துக்களை விற்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/282&oldid=1358054" இலிருந்து மீள்விக்கப்பட்டது