பக்கம்:தமிழக வரலாறு.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலத்துத் தமிழகம்

281



மாற்றுவதும் உண்டு. ஆவணக் களரியும் விற்பனைப் பத்திரமும் இருந்தன. விற்கும் நிலத்திற்கு நான்கு எல்லைகளையும் குறிக்க வேண்டும்.

உள்நாட்டு வாணிகமேயன்றிக் கடல் வாணிகமும் இருந்தது. சீவிசய நாடு (Java), சீனா, பாரசீகம் முதலிய நாடுகளுடன் பல பொருள்களுக்காக வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் அக்காலத் தமிழ்மக்கள்.

நாணயம், எடை, அளவு:

வாணிகம் பெருகவே, அதன் துணைக்காக நாணயம், அளவு முதலியன இன்றியமையாதனவாயின. கழஞ்சு மஞ்சாடி போன்ற நாணயங்கள் வழக்கத்திலிருந்தன. கச்சாணம் என்பது ஒரு நாணயம். பொன் என்றே ஒரு நாணயத்துக்குப் பெயர் இருந்தது. காசு என்பதும் நாணயமே கிராம வட்டங்களில் அவ்வவ்விடத்துக்கு ஏற்ப வழங்கும் சிறுசிறு நாணயங்களும் இருந்தன. ஈழம், சீனம் முதலிய நாடுகளிலிருந்க வந்த காசுகளும் புழக்கத்தில் இருந்திருக்கலாம் பொன்னல்லாத உலோகங்களாலான கருங்காசுகளும் இருந்தன. இவை போன்றே நிறுத்தல், முகத்தல் அளவைகளும் இருந்தன. பொன் நிறைக்கு ஆடவல்லான் என்ற தராசு இருந்த தோடு, ஆடவல்லான் என்ற முகத்தல் அளவை ஒன்றும் இருந்தது. தட்ட மேருவிடங்கன் என்ற நகை நிறுக்கும் கருவியும் ஒன்று உண்டு போலும்! நிறுத்தல் அளவுக்குச் சாதாரணக் கற்கள் உபயோகப்படுத்தப்பட்டன.

கல்வி:

இத்துணை முன்னேற்றம் கண்ட நாட்டில் கல்வி வளரவில்லை என்று சொல்ல முடியுமா? அவரவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/283&oldid=1358058" இலிருந்து மீள்விக்கப்பட்டது