பக்கம்:தமிழக வரலாறு.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

தமிழக வரலாறு



தகுதிக்கு ஏற்பக் கற்றிருந்தனர் எனலாம். ஆராய்ச்சியாளர். இருபதாம் நூற்றாண்டைக் காட்டிலும் அன்று தமிழ்நாட்டில் கற்றவராக அதிகம் இருந்திருப்பர் என்பர். புராணங்கள் பயிலும் வழக்கம் அதிகமாக உண்டு. மதப் பள்ளிகளும் மடங்களும் அதிகமாய் வளர்ந்த காலம் அது. எனவே, சமயக் கல்வியைப் பலர் கற்றனர். மொழிக் கல்லூரிகள் பல இருந்தன. ஆசிரிய மாணவர் தொடர்பு நன்கு பொருந்தி இருந்தது போலும் ஒரு வடமொழிக் கல்லூரியில் 14 ஆசிரியர்களும் 290 (220 உயர் வகுப்பு 70, தொடக்க வகுப்பு) மாணவர்களும் இருந்தனர் என்பர்[1]. தென்னார்க்காட்டு எண்ணாயிரத் திலும் செங்கற்பட்டுத் திருமுக்கூடலிலும் கோயில் வருமானத்தில் கல்லூரியும் மருந்தகமும் அமைக்கப்பட்டிருந்தனவாம். திருவாவடுதுறையில் மருத்துவக் கல்லூரியும், திருவொற்றியூரில் இலக்கணக் கல்லூரியும் இருந்தன. எனினும், தமிழ் வளர்க்கும் கல்வி நிலையங்கள் அதிகமாய் இல்லை என்பது உண்மை.

சமயம்:

பிற்காலச் சோழர் காலத்தில் கோயில்களே சமுதா யப் பின்னணி என்று கண்டோம். அவற்றுள் சைவ வைணவக் கோயில்களே அதிகம். வேதம் ஓதல், புராணம் பயிற்றல், திருமுறை ஒதல் முதலியன கோவிலில் வழக்கமாகக் கொள்ளப்பட்டன. சிந்தாந்த சாத்திரங்கள் தொடங்கப்பெற்ற காலமும் அது. வட நாட்டுக் கங்கைக் கரையிலிருந்தும் அக்காலத்தில் கைவர்கள் இங்கே வந்து குடிஏறினர். சமய மாறுபாடு இருப்பினும், மக்களிடத்தில் குறுகிய மனப்பான்மை

  1. 1. The Cholas, by K A N.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/284&oldid=1358061" இலிருந்து மீள்விக்கப்பட்டது