பக்கம்:தமிழக வரலாறு.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலத்துத் தமிழகம்

283


இல்லை என்றால் பொருந்தும். நோன்றல் (Tolerance) அவர்களிடம் குடி கொண்டிருந்தது. சில சமயத்தில் அரசர் உட்படச் சமய வெறியராய்க் காணப்பட்டாலும் நாட்டில் சமயக் காழ்ப்பு இல்லை என்பது கண்கூடு. பல மாறுபட்ட சமயத்தவர்களும் அன்று இன்றேபோலக் கலந்துதான் வாழ்ந்தார்கள். பெளத்தமும் சமணமும் ஒரளவு வாழ்ந்தன; கோயில்கள் சமுதாயப் பணிபுரிந்தன. இலக்கிய இலக்கணங்கள்:

பல்வேறு இலக்கியங்கள் இக்காலத்தில் வளர்ந்தனவேனும், சிறந்த இலக்கியங்கள் கல்வெட்டுக்களேயாகும். அவற்றின் அமைப்பு முறையும், அகவல் போன்று அமைந்து ஆற்றொழுக்காகச் செல்லும் சிறப்பும் இலக்கிய வளனை நன்கு காட்டுகின்றன எனலாம். அக்கல்வெட்டுக்கள் பல மறைந்தன. அரசாங்கத்தார் எடுத்த கல்வெட்டுக்கள் அனைத்தையும் வெளியிடுவார்களாயின், இன்னும் வரலாற்றில் பல உண்மைகள் தெரிவதோடு கல்வெட்டு இலக்கியமும் வளம்பெறும் எனலாம். இராசராசேசுவர நாடகம்,இராசராச விஜயம் முதலிய நாடகங்கள் செய்யுள் முறையில் இயற்றப்பட்டன போலும் குலோத்துங்க சோழன் சரிதையும், சயங்கொண்டார் பரணியும், ஒட்டக் கூத்தர் உலாக்களும் சோழ அரச பரம்பரைக்காகப் பாடப் பட்டனவேனும் அவை வரலாறுகள் பொதிந்த சிறந்த இலக்கியங்களாய் விளங்குகின்றன. இக்காலத் தொடக்கத்தில் கொங்குவேளிரால் எழுதப்பெற்ற உதயணன் கதையும், பின்னர்ப் பத்தாம் நூற்றாண்டில் திருத்தக்க தேவர்தம் சீவக சிந்தாமணியும், மற்றும் வளையாபதியும் குண்டலகேசியும் எழுந்தன. கல்லாடர் இயற்றிய கல்லாட நூலும் இக்காலத்ததே. சிறந்த ஒட்டக்கூத்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/285&oldid=1358067" இலிருந்து மீள்விக்கப்பட்டது