பக்கம்:தமிழக வரலாறு.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

தமிழக வரலாறு



சோழ அவைக்களப் புலவர். இவர் உலா, பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி போன்ற பல பிரபந்தங்களைப் பாடியுள்ளார். இவர் காலத்தவரெனப்படும் கம்பர் எழுதிய இராமாயணம் இக்காலத்ததன்றோ? சேக்கிழார் பெரிய புராணமும் இக்காலத்து இலக்கியமே. கம்பரது ஏரெழுபது போன்ற சிறு நூல்களும் உண்டாயின. ஒட்டக் கூத்தர் காலத்தவர் என்னும் புகழேந்தியார் தம் நளவெண் பாவை இக்காலத்திலே பாடினார். குலோத்துங்கன் கோவை, தஞ்சை வாணன் கோவை, தில்லை நம்பி திருவிளையாடல் போன்ற இலக்கியங்கள் இக்காலத்து எழுந்தவையே. இவற்றையன்றி இக்காலத்தனவாகச் சொல்லப்பெறும் எத்தனையோ தனிப் பாடல்கள், தனிப் பாடல் திரட்டில் இடம் பெற்றுள்ளன. கம்பர், புகழேந்தியார், ஒட்டக்கூத்தர், ஒளவையார் போன்றாரது பாடல்கள் பல தனிப்பாடல்களாய் உள்ளன. கூத்தர் காலத்தில் ஒர் ஒளவையார் வாழ்ந்தார் என்பதைத் தனிப் பாடலும் புலவர் புராணமும் எடுத்துக் காட்டுகின்றன. ஆத்திசூடி முதலியன செய்த ஒளவையார் இக்காலத்த ராக வேண்டும். எனவே, அவர் எழுதிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகியனவும் இக்காலத்தனவேயாம். சமய இலக்கியங்களும் இக்காலத்தில் உண்டாயின. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் போன்றவையும் இக்காலத்தனவே. முந்திய திருமுறைகளை உலகுக்கு அளித்த காலமும் இக்காலமே. அவற்றைக் கல்வெட்டில் எழுதியும், கோயில்தொறும் பாடவைத்தும் சிறப்புச் செய்த காலமும் இக்காலமே. மெய்கண்டார், உமாபதி சிவம் போன்றார் வாழ்ந்து சித்தாந்த சாத்திரஞ்செய்த காலமும் இதுவே. இக்காலத்தின் இறுதியில் அவர்கள் வாழ்ந்தார்கள் எனலாம் இக்காலத்தில் பல வைணவ இலக்கியங்களும் வளர்ந்தன. சைவ இலக்கியங்களைக் காட்டிலும் வைணவ இலக்கியங்கள் வடமொழித்தொடர்பை அதிகம் பெற்றன. இராமா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/286&oldid=1358078" இலிருந்து மீள்விக்கப்பட்டது