பக்கம்:தமிழக வரலாறு.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

தமிழக வரலாறு



பேரரசின் இறுதி மன்னனாய் வாழ்ந்தான். பாண்டியருக்குச் சோழர் பகையேயன்றி வடக்கே இருந்து மற்றொரு பெரும்பகையும் இருந்து. ஹொய்சள நாட்டு மன்னரும் பாண்டியனுக்கு இடைவிடாது தொல்லை கொடுத்து வந்தனர். எனினும் பாண்டியன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது முன்னேறிக்கொண்டே இருந்தான். இக்காலத்தில் பாண்டியர்களும் சோழர்களைப் போன்றே பலப்பல கல்வெட்டுக்களை வெட்டிவைத்து உள்ளார்கள். எனவே, அவர்களது வரலாற்றை அறிவது எளிமையாயிற்று.

தன் முன்னோர் இருவர், சோழமன்னர் மீதும் மற் துள்ள அரசர்கள் மீதும், படை எடுத்துத் தம் நாட்டைப் பரப்பும் வகையில் பணியாற்றிச் செல்ல, மாறமர்மன் சுந்தரபாண்டியன் 1238-ல் பாண்டிய நாட்டு அரியனை ஏறினான். இவன் காலத்திலேயும் சோழரோடும் பிறரோடும் பாண்டியர் போரிட வேண்டி இருந்தது. கொங்கு நாடும் பிற பகுதிகளும் பாண்டியர் வசமாயின. ஹொய்சளர் மைசூர் நாட்டோடு அடங்கிவிட்டனர். காஞ்சிபுரம் பாண்டியர் துணைத் தலை நகரமாயிற்று. ஈழ நாடும் பாண்டியரின் கீழ் அடிமையுற்று இருந்தது. சேர நாடு பாண்டியரின் கீழே கப்பம் கட்டிக்கொண்டு தாழ்ந்து வந்தது. எனவே, இப்பாண்டியன் காலத்தில் அவர்தம் நிலப்பரப்பு விரிவடைந்து தமிழ்நாட்டு முழுமையும் பாண்டிய அரசின் கீழ் இருந்த தென்னுமாறு அமைந்தது இந்த மாறவர்மனுக்குப்பின் சடையவர்மன் கல்தர பாண்டியன் 1231-ல் பட்டதுக்கு வந்தான். இவன் பெருவீரனாய் வாழ்ந்தான். வடக்கே காஞ்சிபுரத்தைத் காண்டித் திருபுட்குழி வரையில் இவன் எல்லை அமைந்திருந்தது. இவனே இறுதியாகச் சோழப்பேரரசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/290&oldid=1358368" இலிருந்து மீள்விக்கப்பட்டது