பக்கம்:தமிழக வரலாறு.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலப் பாண்டியர்

291


 (1243-1258). இவனுடைய கல்வெட்டுக்கள் மூன்று வகையான தொடக்கத்தன என்பர். தந்தையின் காலத்திலேயும் இவன் ஆண்ட காலத்திலேயும் இவன் புகழ் சிறக்கப் பரவி இருந்தது. கி.பி. 1267ல் வீராபிஷேகமும் செய்துகொண்டவன். இவன் வெற்றிகள் பலவற்றைச் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்களே குறித்துள்ளன. இவனுடைய கல்வெட்டுக்கள் கோவை மாவட்டத்தில் கிடைக்கின்றமையின், இவன் அந்நாட்டை வெற்றி கொண்டமை நன்கு புலனாகின்றது. இவனுடைய கல்வெட்டுக்கள் அந்நாட்டு மக்களுடைய அக்கால வாழ்க்கை முறையைக் காண நன்கு பயன்படும் என்பர். புதுக்கோட்டையிலுள்ள ஒரு கல்வெட்டு அக்காலத்தில் நீதி வழங்கிய வகையைக் காட்டுகிறது.[1] நிலங்களை ஆண்டுக் குத்தகைக்கு விடும் வழக்கமும், கடமை வரி வசூலிக்கும் வழக்கமும் மக்கள் சபை கூடிப் பொருளாராயும் நிலையும், கோயில்களுக்கு நன்கொடை வழங்கும் வகையும், கோயில்பணி போன்ற பொதுப்பணிக்கு நன்கொடை வசூலிக்கும் விதமும், வியாபாரிகளது கூட்டுச்சபை அமைக்கும் முறையும் பிறவும் கல்வெட்டுக்களால் நன்கு எடுத்துக் காட்டப் பெறுகின்றன.

மாறவர்மன் குலசேகரன்:

இவனை அடுத்து மாறவர்ம்ன் குலசேகரன் பட்டத்துக்கு வந்தான். இவன் 1268ல் அரசு கட்டில் ஏறினான் என்பர். இவன் காலத்தில் பாண்டிய நாடு வந்திருந்த இத்தாலி நாட்டு மார்ககபோலோ என்பவன், தான் வந்தபோது பாண்டிய நாட்டில் ஐந்து பாண்டியர் அரசாண்டனர் எனக் குறித்துள்ளான். அது


  1. 1. The Pandian Kingdom by K. A. N. p. 178.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/293&oldid=1358425" இலிருந்து மீள்விக்கப்பட்டது