பக்கம்:தமிழக வரலாறு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழக வரலாறு


ளும் நல்ல வரலாற்று ஆசிரியர்கள் கூட அத்தென்னிந்திய–தமிழக–வரலாற்றை நன்கு ஆராய்வதில்லை; அதன் பழமையையும் அது வளர்ந்த வரலாற்றையும் காண முனைவதில்லை. ஆயினும், தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர் சிலர் இந்நாட்டு வரலாற்றை ஒரு கால எல்லைக்கு உட்படுத்தி, முறைப்படி நன்கு வரையறை செய்து, தமிழகத்தின் வரலாற்று நூல்களை இப்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகின்றார்கள். சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அத்துறையில் கருத்திருத்திப் பல நூல்களை வெளியிட்டு வருகின்றன. எனவே, இன்று அவற்றின் துணை கொண்டு தமிழ்நாட்டு நீண்ட வரலாற்றை ஒருவாறு தொகுத்து அறுதியிட முடியும்.

தமிழன் வரலாற்றின் தொன்மை :

தமிழ்நாடு காலத்தால் முந்தியதானமையின் அதன் வாழ்வின் நெடுங்காலம் வரலாற்று எல்லைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும். வரலாற்று எல்லைக்கு உட்பட்ட தமிழகத்தைப் பல இலக்கியங்களும் பிறவும் எடுத்துக் காட்டுகின்றன என்றாலும், அவ்வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகத்தைக் காணச் சிறந்த சாதனங்கள் இல்லை. ஒரு சில தனிப்பாடல்களும், கதைகளும், பிற குறிப்புக்களும் ஓரளவு துணை செய்கின்றன எனலாம் பிந்திய காலத்திலே கோயில் அமைப்புக்களும், கல்வெட்டுக்களும், செப்புப்பட்டயங்களும் தமிழ்நாட்டு வரலாற்றுக்குப் பெரிதும் துணை செய்கின்றன. இவற்றின் வழியே தமிழ்நாட்டு வரலாறு ஒருவாறு உருவாகி விட்டது உறுதி.

இவ்வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால் இன்று தாழ்ந்துள்ளதென்று பேசப்பெறும் தமிழகம் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/30&oldid=1357017" இலிருந்து மீள்விக்கப்பட்டது