பக்கம்:தமிழக வரலாறு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XVI. விசயங்கர வேந்தரும் மராட்டியரும்

ஆண்டவர் யாவர்?

கி. பி. பதினான்காம் நூற்றாண்டும் அதற்கடுத்த இரண்டொரு நுாற்றாண்டுகளும் தமிழ் நாட்டில் இருண்டகாலம் என்றே சொல்லலாம். சோழப் பேரரசு வீழ்ந்து பாண்டியர் தலைதூக்கிய காலத்தில் தமிழ் நாட்டுப் பண்பாடும் கலாசாரமும் பிற நல்லியல்புகளும் கெடா வகையில் பாண்டியர்கள் பாதுகாப்பார்கள் என்ற துணிவு கொள்ள வழி இருந்தது. ஆனால், இறுதியாகப் பாண்டியப் பேரரசு கவிழ்ந்த பிறகு தமிழ்நாட்டு நிலையை என்னென்பது? வடக்கிலிருந்து இசுலாமியரும் அவருக்கெதிராக விசயநகரத்தாரும் மராட்டியரும் வந்து வந்து நாட்டைப் போர்க்கள மாக்கினார்கள். இந்த இரண்டு மூன்று நுாற்றாண்டுகளிலும் பலப்பல மரபினர் -பலப்பல வேற்று மன்னர்கள்-வாழ்ந்து சென்றார்கள். பாண்டியரால் வலிய அழைத்துவரப்பட்ட இசுலாமியர் நாட்டையும் நகரையும் பாழாக்கி, கோயிலையும் குளத்தையும் நிலை கெடுத்து, கிடைத்தவற்றைக் கொண்டு சென்றார்கள் எனக் கண்டோம். அவர்களைத் தடுப்பதற் காக விசயநகர வேந்தரும் மராட்டியரும் முயன்று ஒரளவு வெற்றி பெற்றார்கள் எனலாம். இந்த நுாற்றாண்டுகளில் விசயநகரத்தாரும் மராட்டியரும் தமிழ்நாட்டை ஆண்டார்கள் எனலாம். வடக்கே இசுலாமியர்தம் பலம் ஒங்க ஓங்க, மராட்டியரால் மத்திய இந்தியாவில் நிலை பெற்றிருக்க முடியவில்லை. எனவே, அவர்களனைவரும் தெற்கு நோக்கி வந்தனர். தமிழ் நாட்டில் செஞ்சிக் கோட்டை, தஞ்சாவூர், மதுரை ஆகிய மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/301&oldid=1358455" இலிருந்து மீள்விக்கப்பட்டது