பக்கம்:தமிழக வரலாறு.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்

303



என்றாலும், விசயநகர மராட்டியர் ஆட்சிக் காலத்தில் சமூகநெறி சீரழிந்தமை பலப்பல சாதிகள் தோன்ற ஏதுவாயிற்று. வருணாச்சிரம தருமத்தை வளர்த்தவர்கள் விசயநகர வேந்தர்கள். மகமதியருக்கு எதிராக இந்துப் பேரரசை நிலை நிறுத்தவேண்டி, அந்த இந்து சமயத் தின் வருணாச்சிரமக் கொள்கைகளை அப்படியே மேற் கொண்டு பல்வேறுவகைச் சாதிகளை வளர்த்து விட்டனர் எனலாம். அது போன்றே, பக்தி மார்க்கம் அதிகமாக வளரத்தக்க வழிகாணப் பல்வேறு வகைப்பட்ட தெய்வங்களும் வழிபாடுகளும் நாட்டில் பெருகிவிட்டன எனலாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடையில் உண்டான மாறுதல்களைக் காட்டிலும் பதினான்காம் நூற்றடுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் அதிகமான மாறுதல்கள் நாட்டில் உண்டாயின எனலாம். இவற்றிற்கு இடையிலே தமிழர் பண்பாடு கெடாவகையில் இலக்கியங்களும் பிறவும் வளர்ந்துகொண்டே வந்தன என்பது காணல் வேண்டும்.

விசயநகர வேந்தர்:

விசயநகர வேந்தர் தம் ஆட்சிக் காலத்தில் அரசர்கள் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்பட்டார்கள். தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு இருந்த அதேசிறப்பு விசயநகர வேந்தருக்கும் இருந்தது எனலாம். மன்னன் ஆணை வழி குடிகள் இயங்கி வந்தனர் எனலாம். மன்னர் பரம்பரை பெரும்பாலும் தந்தைக்குப் பின் மகன் எனவே வந்தது. வயது முதிர்ந்த மன்னர்கள், மக்களை ஆளவிட்டு ஒதுங்கி, ஆண்டவன் பணியில் ஈடுபட்டிருந்ததும் உண்டு என்பதும் தெரிகிறது. தென்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/305&oldid=1358483" இலிருந்து மீள்விக்கப்பட்டது