பக்கம்:தமிழக வரலாறு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது வரலாறு?

29


காலத்தில் தலை நிமிர்ந்து நின்று. தனது அகன்ற எல்லையில் ஒரு மொழி வைத்து உலகாண்டது மட்டுமன்றி, பிற நாட்டாரோடு வாணிபத் தொடர்பினைக் கொண்டு வாழ்ந்ததென்பதும் இந்நாட்டில் மன்னரும் மக்களும் ஒன்றிக் கலந்து வேறுபாடற்று வாழ்ந்தார்கள் என்பதும், மக்கட் சமுதாயம் வாழும் நிலப்பிரிவால் வேறுபட்டதாயினும் உளப்பிரிவின்றி ஒன்றியே வாழ்ந்ததென்பதும், மக்கள் நாகரிகம் வாய்ந்த நல்ல நகரங்களிலே நலம் பெற வாழ்ந்து, பிற நாட்டவரெல்லாம் வந்து தங்கி வாழ்ந்து வளம் பெருக்கிச் செல்ல உதவி நின்றார்கள் என்பதும், உழவும் தொழிலும் செய்து சோம்பலின்றி வாழ்ந்து வந்தார்களென்பதும், ‘ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்,’ என்ற சமய உணர்வில் மாறுபாடற்ற செம்மை வாழ்வில் திளைத்தார்கள் என்பதும், சமுதாயத்தை இணைத்துச் செல்வதாகிய நாட்டு வாழ்க்கையே அவர்கள் வாழ்க்கை என்பதும், எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் நல்ல நெறியே அவர் தம் வாழ்க்கை நெறி என்பதும் நன்கு விளங்கும். வரலாற்றுக் கெட்டாத நெடுங்காலந்தொட்டு இன்று வரை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குவதே தமிழ் நாட்டு உண்மை வரலாற்றை விளங்குவது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/31&oldid=1357021" இலிருந்து மீள்விக்கப்பட்டது