பக்கம்:தமிழக வரலாறு.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

தமிழக வரலாறு



குற்றத்தை விசாரித்து நீதி வழங்கியதைக் குறிக்கின்றது. கோயில் அறங்காப்பாளருங்கூட இது போன்ற குற்றங்களை விசாரிக்க உரிமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. குற்றத்திற்கு ஏற்பத் தண்டனையும் அமைந்திருக்கும். அபராதம் மட்டும் விதிப்பதும் உண்டு. அக்காலத்தில் நாட்டு அமைதியைக் காக்க நல்ல காவல் துறை (Police) அலுவலர்கள் இருந்திருக்கின்றனர். உள்நாட்டு அமைதியைக் காக்கும் காவல்துறையாளரோடு, நாட்டைப் பிறரிடமிருந்து காப்பாற்றும் போர்த்துறையாளரும் (Military) இருந்திருக்கின்றனர்.[1] பல்வேறுவகைப் படையாளரும் இருந்தனர் எனலாம். இக்காலத்தில் நாற்புறமும் மாற்றார் சூழ்ந்திருந்தமையின் (வடக்கில் இசுலாமியர், கடற்கரை ஒரங்களில் மேலை நாட்டினர்) வெளிநாட்டுத் தொடர்பு தமிழ்நாட்டுக்குப் பெரும்பாலும் இல்லை எனலாம்.

நாட்டு ஆட்சி:

விசயநகரப் பேரரசின் அளவு முற்காலத் தமிழ்ப் பேரரசுகளைக் காட்டிலும் பெரியதாய் அமைந்தமையின், மாகாண அரசாட்சி நன்கு நிலை பெற வேண்டுவதாயிற்று. தென்னிந்தியாவில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஒரு மாகாண ஆட்சி அமைந்தது. பிரிவுகள், கோட்டம், வளநாடு போன்று பலவகையில் பெயர்பெற்றன. மாநில அரசுகள் சிலபோது மக்கள் விருப்பத்துக்கு மாறாக நடப்பதும் உண்டு போலும்! அப்போதெல்லாம் விசயநகரப் பேரரசு, மக்கள் உளமறிந்து, அவர்தம் நலம்புரக்க நாட்டு ஆட்சியில் தலையிட்டு வந்தது எனலாம். மாநில நிருவாகிகள்


  1. l. Administration & Social Life under Vijayanagar, Empiro p. 125
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/310&oldid=1358655" இலிருந்து மீள்விக்கப்பட்டது