பக்கம்:தமிழக வரலாறு.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

தமிழக வரலாறு



மறைந்து விட்டது எனலாம். இவ்விசய நகர ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கிராம அதிகாரிகள் நியமிப்பு முறையே இன்றளவும் சில மாறுதல்களோடு நிலை பெற்று வருகின்றது என்பது பொருந்தும்.

கோயில்கள்:

விசயநகர ஆட்சியில் கோயில்கள் பலவாக வளர்ச்சியுற்றன. விசயநகர வேந்தர்கள் வைணவர்களே. எனினும், பிற சமயங்களிடத்தில் அவர்களுக்கு வேறுபாடு இல்லை. சைவ சமயம் நாட்டின் சிறந்த சமயமாக இருந்தது. சங்க காலத்திலிருந்து வந்த பெளத்தமும் சமணமும் ஒரு சிறு அளவில் எங்கெங்கோ அமைந்து நின்றன. இசுலாமியர் படையெடுப்பால் 'இசுலாம்' என்னும் இசுலாமிய சமயமும், மேலை நாட்டார் வருகையால் கிறித்தவ சமயமும் மெதுவாகக் கால் கொள்ள ஆரம்பித்தன. எனினும், விசயநகர வேந்தர் காலத்தில் சைவமும் வைணவமும் மேலோங்கின. இசுலாமிய மதமாகிய மாற்று மதத்தைப் புகவொட்டாமல் தடுப்பதற்கென்றே இப்பேரரசு தோன்றியதாதலால், கோயில் வளர்ச்சியில் இந்தப் பரம்பரையினர் மிக்க அக்கறை காட்டினர். இவர்களை ஒட்டி நாயக்க மரபினரும், மராட்டியருங்கூட இந்துக் கோயில்களை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தனர், சோழர் காலத்தில் கட்டப்பெற்றுப் பழுதுற்ற பல கோயில்களை இவர்கள் செப்பமுறச் செய்தனர். கோயில்களுக்கு நிறைய நிலங்கள் அளித்தனர். கோயில்களைப் பராமரிக்க நல்ல அறக் குழுவினரை ஏற்படுத்தினர். கோயிற் பொருளை மக்களுக்குப் பயன்படும் வகையில் கடனாகவும் உதவினர்.[1] கோயில் நிலங்களையும் பிறவற்றையும் கோயில் நலம்கருதி, விற்கவும் வாங்கவும் அந்த அறங்


  1. 1. Administration & Social Life under Wijayanagar, Empire B. 227.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/312&oldid=1358683" இலிருந்து மீள்விக்கப்பட்டது