பக்கம்:தமிழக வரலாறு.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்

313


அரச காரியங்களில் துணை பாவதோடு, அரசருடன் போர்க்களத்திற்கும் சென்றனர் எனலாம். பரத்தையர் குலமும் அக்காலத்திருந்தது. ஆயினும், அவர்கள் வரி கட்ட வேண்டியவராயிருந்தனர். அவ்வாறு ஒராண்டு 12,000 பணம் அவ்வரியால் வந்ததென்றும், அதைக் காவல் பகுதிக்குச் (Police) செலவிட்டனரென்றும் தெரிகிறது.[1] இப்பரத்தையர் தம் பரத்தமைத் தொழிலோடு கோயிலில் நாள்தோறும் ஆண்டவர் முன் ஆடியும் பாடியும் வாழ்ந்து வந்தனர்.

உணவு:

மக்கள் உணவுமுறை சாதாரணமாகவே அமைந்திருந்தது எனலாம். அரிசி, பருப்பு, காய்கறி வகைகள், பால், பழம் முதலியன உணவுப் பொருள்களாக அமைந்தன. வெளிநாட்டாராகிய அப்துல் ரசாக்கு என்பவருக்கு நாள்தோறும் விசயநகர வேந்தன் இரண்டு ஆடுகளையும், எட்டுப் பறவைகளையும், ஐந்து அளவை அரிசியையும், ஒரு அளவை வெண்ணெயையும், ஒரு அளவை சர்க்கரையையும் கொடுத்ததாக அறிகிறோம். [2]மாமிச உணவு ஒரு சிலரால் உண்ணப்பட்டு வந்தது. பல்வேறு இலைகள் உண்கலன்களாகப் பயன்பட்டன. பொதுவாக மக்கள் ஒருவர் உண்ணும்போது மற்றவர் காணக்கூடாது போலும்! சாதிகள் பல்கிவிட்டதனால் அரச விருந்துகள் தவிர்த்துக் கலந்துண்ணும் பெருவிருந்துகள் இல்லை எனலாம்.

அரசர்கள் ஆடை வகையில் பெரும் பணம் செலவு செய்திருக்கவேண்டும். மன்னவரும், மற்ற உயர்நிலை-


  1. 1. Administration & Social Life under Vijayanagar Empire p. 266
  2. 2. Administration & Social Life under Vijayanagar Empire p. 287
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/315&oldid=1358756" இலிருந்து மீள்விக்கப்பட்டது