பக்கம்:தமிழக வரலாறு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

தமிழக வரலாறு


யில் உள்ளவர்களும் ஆடைகளுக்காகப் பெரும் பொருள் செலவு செய்தார்கள் எனலாம். சாதாரண மக்கள் அணிந்த உடைகள் அவரவர் தகுதிக்கும் பொருட் செலவுக்கும் ஏற்ற வகையில் அமைந்தன எனலாம். மக்கள் மிதியடி அணிந்தார்கள். குடைகளும் வழக்கத்தில் இருந்தன. அரசவை செல்லும் அதிகாரிகளும் அவர்தம் பெண்டிரும் இக்காலத்தைப் போன்று உயரிய உடை அணிந்தே அரச விருந்துகள் முதலியவற்றிற்குச் செல்வர் போலும் சில சமயங்களில் பெண்கள் தலைக்கும் ஆடை அணிவார்களாம். பெண்களும் மிதியடி அணிந்திருந்தனர். சாதாரணப் பெண்கள் உயர்ந்த ஆடை அணி இன்றி, எளிய உடை அணிந்து எளிய வாழ்வினையே மேற்கொண்டார்கள் எனலாம் எனினும், உயர்ந்த பெண்டிராயினும் மிக எளியவராயினும் ஏதேனும் ஒரு நகை அணிந்து கொண்டுதான் இருந்தார்கள் என்று அப்துல் ரசாக்கு கூறுகின்றார்.[1] தாம்பூலம் போட்டுக் கொள்ளும் வழக்கமும் இருந்துவந்தது. பொழுது போக்குக்காகப் பல்வேறு விளையாட்டுக்களும் பந்தயங்களும் இக்காலத்திருந்தன எனலாம். பொழுது போக்குக்கெனவே பரத்தையர் நடனமாடலும் உண்டு. கோயிலில் இறைவன்முன் ஆடும் வழக்கம் உண்டு என்பதை முன்னரே பார்த்தோம். இசையும் சிறந்திருந்தது. தஞ்சை இரகுநாத நாயக்கர் இசையில் வல்லவராய் இருந்தார். பொதுவாகப் பெண்கள் பண்னொன்றப் பாடுவதிலும் வீணை முதலிய இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவர்களாய் இருந்தார்கள்.

சமயம்:

விசயநகர வேந்தர் காலத்தில் சைவம் வைணவம் இரண்டும் மேலோங்கி இருந்தன எனக் கண்டோம்.


  1. 1. Administration & Social Lise under Vijyanagar, Empire p. 23
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/316&oldid=1358770" இலிருந்து மீள்விக்கப்பட்டது