பக்கம்:தமிழக வரலாறு.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

தமிழக வரலாறு



சைவ சமயமே நாட்டில் கதழைத்தோங்கி நின்றது. வைணவ சமயமும் இராமாநுசருக்குப் பின் பல சாதியாராலும் நன்கு போற்றப்பட்டு வந்தது. வடகலை தென்கலை என்ற வேறுபாடு இக்காலத்தில் நாட்டில் வளர்ந்தது. வேதம் போற்றும் வட கலையாரும் தமிழ்ப் பிரபந்தம் போற்றும் தென்கலையாரும் தம்முள் மாறு பட்டு நின்றனரேனும், சமயம் அதனால் தாழாது வளர்ச்சியுற்றதென்றே சொல்லலாம். இராமாநுசரால் தமிழ்ப் பிரபந்தங்கள் நன்கு போற்றப்பட்டமையே பல சாதியாரிடம் வைணவம் வளர ஏதுவாயிற்று. இரு வகைச் சமயங்களும் தமக்கு அடிப்படைக் கொள்கையை ஒன்றெனக் கொள்ளினும், இறைவனை அடையும் வழித்துறைகளை வெவ்வேறாக வகுத்துக் கொண்டன.

இப்பெருஞ் சமயங்களைத் தவிர்த்துச் சமண சமயமும் இவர்களால் போற்றி வளர்க்கப்பட்டது எனலாம். வேந்தர் தம் அமைச்சர்களில் சமணர்களும் இருந்திருக்கின்றனர். எனவே, அவர் வழிச் சமணம் வளர்ந்திருக்கலாம் கிறித்தவ சமயம் விசய நகரத்தார் ஆட்சிக் காலத்துக்கு முன்பே நாட்டில் வாழ்ந்தது என்று கொண்டாலும், அது இவர்கள் காலத்தில் தான் வளர்ச்சியுற்றதெனலாம். மேலை நாட்டிலிருந்து பல சமயத் தலைவர் இங்குவந்து, சிறப்பாகத் தென்பாண்டிநாட்டுச் சீமையில் தாழ்ந்த சாதிமக்களுள் பலரைக் கிறித்தவராக் கினார்கள் மதுரை நாயக்க மன்னர் அவையிலிருந்த ராபர்ட் டி நோபிலி[1] என்பவர் பல இந்துக்களைத் தொடர்ந்து கிறித்தவராக்கிக் கொண்டே இருந்தார். விசயநகர வேந்தருள் சிலர் இக்கிறித்தவப்பாதிரிமார்களை ஆதரித்தார்கள் எனினும், இப்பாதிரிமார்களால் தாம்

  1. 1. Robert de Nobili
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/318&oldid=1358818" இலிருந்து மீள்விக்கப்பட்டது