பக்கம்:தமிழக வரலாறு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

II. வரலாற்று மூலங்கள்


வரலாற்றுக்கு முன் :

ஒரு நாட்டின் வரலாற்றை அறுதியிட்டுக் கூறுவது நினைக்கும் அளவு எளியதன்று. மிகு பழங்காலந் தொட்டு நாட்டில் வாழ்ந்த மக்களினம், பிற உயிரினம் ஆகியவற்றின் வரலாறு எளிமையில் உணரத்தக்கதன்று. இன்றைய மனிதன் என்னதான் அறிவுடையவன் என்று கூறிக்கொண்டாலும், அவன் அறிவு ஒரு கால எல்லையிலேதான் அடங்கி விடுகிறது. தாவித் தாவிப் பறந்து என்னதான் ஆராய்ச்சி செய்தாலும், அவ்வாறு செய்யும் அவன் அறிவின் எல்லையே உலகத்தின் தோற்றமென்றோ முடிவு என்றோ கூற இயலாது. இந்த அளவிட்ட அறிவின் எல்லை கொண்டு மனிதன் தனக்கு முன் உலகம் இருந்த வரலாற்றை ஆராய முற்படுகிறான். அவ்வாரய்ச்சிக் கண்களுக்கு என்னதான் முயன்றாலும் நெடுந்தொலைவுப் பொருள்கள் புலப்படுவதில்லை. அந்தப் புலப்படாத பெருங்கால எல்லையில் அமைந்த வரலாற்றை எல்லாம் தொகுக்க நினைத்தாலும் முடிவதில்லை ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாகக் குறிப்புக்கள் மட்டும் கிடைக்கின்றன. எனவே, அறிவுக்கெட்டாத–சான்றுகளால் அறுதியிட முடியாத–அந்த நெடுங் காலத்தை ‘வரலாற்றுக்கு முற்பட்ட காலம்’[1] என்றே முடிவு கட்டி விட்டார்கள் அறிஞர்கள். நம் தமிழ் நாட்டில் அந்தக் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த காலமாகும். சிலர் இரண்டாயிரமாண்டு-


  1. Pre-Historic Period
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/32&oldid=1357027" இலிருந்து மீள்விக்கப்பட்டது