பக்கம்:தமிழக வரலாறு.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர ஆட்சிக்குப் பின்

323


நாட்டுக் கடற்கரையை மட்டும் ஒட்டியதாய் இருந்தது. சோழர் காலத்தில் விரிந்து சீவிசயநாடு வரையில் கடலாதிக்கம் இருந்ததை அறிந்தோம். மேல்நாட்டு மக்கள் வந்த பிறகோ, கடலாதிக்கம் நம் கையில் இல்லை. என்றாலும், கடல்வழி மக்கள் வருகையும் வாணிபமும் பெருகின எனலாம். கி. பி. பதின்மூன்றாம் நுாற்றாண்டில் தமிழர் கையிலிருந்த கடலாதிக்கத்தை ஈழ நாட்டினர் கைப்பற்ற, பின் பதினைந்தாம் நுாற்றாண்டில் அதை அரபியர் கைப்பற்றினர்.[1] அதே கடலாதிக்கம், காலம் செல்லச்செல்ல மேலைநாட்டினர் கையில் சென்று சேர்ந்து விட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்:

மேலைநாட்டு மக்கள் வருகைக்கு முன் விசயநகர ஆட்சி வீழ, இசுலாமியர்கள் போட்டியிட்டு நாட்டை ஆளத் தொடங்கினர். விசயநகர ஆட்சியிலிருந்து விடுபட்ட நாயக்கர் பரம்பரை மதுரையில் ஆட்சி செலுத்தியது. தஞ்சையிலும் செஞ்சியிலும் மராட்டியப் பரம்பரையினர் வாழ்வுக்கு ஊசலாடிக்கொண்டு எப்படியோ வாழ்க்கையை நடத்திவந்தார்கள் எனலாம்.

கி. பி. 1724ல் டில்லியில் ஒளரங்கசீபு மறைந்து பதினெட்டு ஆண்டுகள் கழித்து, ஐதராபாத்துச் சுல்தான் தென்னாடு முழுமைக்கும் தானே உரியவன் என உரிமை கொண்டாடினான். ஏறக்குறைய அதே சமயத்திலேதான் மேலை நாட்டிலே இருந்து வாணிபம் செய்ய வந்தவர்களும் இங்கு இடம் தேடி நிலைத்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் பல செயல்களைச் செய்ய முயன்றனர் கி. பி. 1723ல் ஆங்கிலேயர் சென்னையி-

  1. A Survey of Indian History by K.M. Panickar P, 180-186.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/325&oldid=1376091" இலிருந்து மீள்விக்கப்பட்டது