பக்கம்:தமிழக வரலாறு.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

தமிழக வரலாறு


பள்ளியைத் தலைநகராக்கிக் கொண்டு, அவர்கள் தெற்கு நோக்கி வருவதைத் தடுக்க முயன்றார். இவர் அக்காலத்தில் தஞ்சையை ஆண்ட விசயராகவரை வென்று, தம் தம்பியைத் (அழகிரி நாயக்கர்) தஞ்சைக்குத் தலைவராக்கினார். எனினும், அவ்வழகிரிநாயக்கர் தம் தமையனாரோடு மாறுபட்டுத் தஞ்சையைக் கி பி. 1675ல் ஏகோஜி என்ற மராட்டிய மன்னரிடம் விட்டு ஒடினார். அதன் பிறகே மேலே கண்டபடி மராட்டியப் பரம்பரை தஞ்சையை ஆண்டது இக்காலத்திலேதான். சிவாஜியின் படைஎடுப்புக் காரணமாக, பீஜபூர் சுல்தான்களின் தென்னாட்டு ஆதிக்கம் ஒடுங்கியது. இதே காலத்திலேதான் மைசூர் கர்நாடகப் போர்களும் நடைபெற்றன. அவற்றில் மதுரை நாயக்கர் பரம்பரை கொண்ட பங்கு பெரிது. இதே வேளையிலேதான் இராமநாதபுர சேதுபதி மன்னர்களும், புதுக்கோட்டை அரசும் தலை தூக்க ஆரம்பித்தன எனலாம். புதுக்கோட்டை அரசு கி.பி. 1686ல் இரகுநாத ராசத் தொண்டைமான் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.[1] சேதுபதி மன்னர் பரம்பரை சற்று முந்தியது எனலாம்.

மதுரையில் நான்காம் முத்து வீரப்பர் இறக்க, சொக்கநாதர் மனைவியாகிய மங்கம்மாள் நாட்டை ‘ரீசண்டாக’ ஆள முன்வந்தாள். வீரப்பர் இறந்த பிறகே அவர் மகன் பிறந்தான். மங்கம்மாள் சிறந்த வீர உளம் கொண்டவளாய் இருந்தும், வட நாட்டு ஒளரங்கசீபு ஆணையை மீற முடியாதவளாய், தஞ்சை மராட்டியர் போன்று தானும் கி. பி. 1693ல் தில்லிக்குக் கப்பம் கட்டினாள். அவள் ஆட்சி 1705ல் முடிவுற்றது. சேதுபதி ஆட்சியும் இதே வேளையில் இராமநாதபுரம் சிவகங்கை எனும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட, அதன் போராட்டத்தில் தென்னாட்டின் மறவர் ஆட்சி


  1. 1. History of India, by K. A. N. p. 308
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/328&oldid=1358947" இலிருந்து மீள்விக்கப்பட்டது