பக்கம்:தமிழக வரலாறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்று மூலங்கள்

31


களுக்கு முற்பட்ட காலம் என்பர். எது எப்படியாயினும் தமிழ்நாட்டு வரலாற்றில் நன்கு அறிந்த கால எல்லையினும் அறியாத கால எல்லையே மிக அதிகம் என்பது தேற்றம். தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி, வேறு எந்த நாட்டுக்கும் இந்த உண்மை பொருந்துவதாகும். உலக வரலாற்று நிலையும் அப்படியே. எனவே, வரலாற்றுக்கு முற்பட்ட, ஒன்றும் அறிய முடியாத காலமே நீண்ட தொரு பெருங்காலமாகும்.

கன்ன பரம்பரைக் கதைகள் :

குறுகிய கால எல்லையில் உள்ள வரலாற்றை நமக்கு விளக்குவன யாவை ? ஒரு நாட்டு வரலாற்றை நமக்கு விளக்கப் பல பொருள்கள் பயன்படுகின்றன. சிறப்பாகத் தமிழ் நாட்டு வரலாற்றுக்கும் எத்தனையோ வரலாற்று மூலங்கள் உள்ளன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகக் காண்போம். வரலாறு என்பது திட்டமாக வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டிக்குள் அமைந்ததாகி, உண்மைகளை விளக்குவது என்பதைக் கண்டோம். ஆயினும், வரலாற்றுக்கு முற்பட்ட சில உண்மைகளும் விளங்குவனவே கன்ன பரம்பரைக் கதைகளும், இராமாயணம் பாரதம் போன்ற கதைகளும். இராமாயணம் போன்ற காவியங்கள் வரலாற்று மூலங்கள் ஆகமாட்டா என்பதை ஸ்மித்து என்பார் தமது நூலில் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.[1] எனவே, அவற்றை வேண்டுமானால் வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகத்தைக் காட்ட உதவும் கன்ன பரம்பரைக் கதைகளாகக் கொள்ளலாம். இவற்றைத் தவிர, தமிழ் நாட்டில் மூலை மூடுக்குக்களில் வழங்கும் சில கதைகளும், திருவிளை-


  1. The Oxford History of India, By V. A SMITH, pp, 30, 31.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/33&oldid=1357043" இலிருந்து மீள்விக்கப்பட்டது