பக்கம்:தமிழக வரலாறு.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர ஆட்சிக்குப் பின்

333


கடலாதிக்கம் கை மாறியது:

இவர்களை அடுத்து மேலை நாட்டிலிருந்து டச்சுக்காரர் வந்தனர் அவர்கள் 1695இல் போர்த்துக்கல் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இந்தியக் கடற்கரை வரையில் வந்து அத்துடன் நில்லாது தென்னிந்தியத் தீவுகளாகிய ஜாவா முதலிய இடங்களுக்குச் சென்றார்கள். இலங்கைப் பகுதிகளையும் கைக்கொண்டார்கள். எனவே பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர் தம் கடலாதிக்கம் குன்றியது எனலாம். கிழக்கு இந்தியக் கம்பெனி கி.பி. 1603இல்[1] தோன்றியது. டச்சுக்காரருக்குப்பின் அக் கம்பெனியின் உரிமையாளராகிய ஆங்கிலேயரே இந்தியக் கடலுள் புகுந்தனர். போர்த்துக்கீசியரும் பின் சென்றதால் கடலாதிக்கம் பொறுத்தவரை, ஆங்கிலேயரும் டச்சுக்காரருமே அடிக்கடி போர் செய்தனர். இவர்களை அடுத்துப் பிரஞ்சுக்காரரும் இக்கடலாதிக்கத்தில் புகுந்து போர் செய்ய நேரிட்டது. பின்னர் இந்தியக் கடலாதிக்கத்தைப் பொறுத்தவரை பிரெஞ்சியரும் ஆங்கிலேயருமே போரிட்டனர். அவருள் ஆங்கிலேயரே முன்னின்று வெற்றி பெற்று 1784இல் முழு உரிமையும் பெற்றனர். முழு உரிமை 1784 ல் வந்த போதிலும் அதற்கு நெடுங்காலத்துக்கு முன்பே தமிழக எல்லையாகிய கடல் ஆங்கிலேயரின் கீழ்ப்பட்டுவிட்டது. சோழர்தம் கப்பல்கள் அணிவகுத்து நின்ற அந்தக் கடல் எல்லையில் ஆங்கிலேயர்தம் கப்பல்கள் ஆதிக்கம் செலுத்தி அதன்வழி நிலைத்த ஆதிக்கத்தையும் பெருக்குதற்கு முயற்சி செய்து, வெற்றியும் பெற்றன. வடக்கே தில்லியிலும், தெற்கே தமிழ் நாட்டிலும் சரியான-நிலைத்த-நாட்டைப் பண்பட்ட முறையில் பேணிக்காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிலைத்த நம்பிக்கை கொண்ட


  1. A Survey of Indian History, P. 207.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/335&oldid=1359217" இலிருந்து மீள்விக்கப்பட்டது