பக்கம்:தமிழக வரலாறு.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர ஆட்சிக்குப் பின்

337


ஜெனரல்’ ஆக்கினர் கிழக்கிந்தியக் கம்பெனியார். அவர் கிளைவைப் போலச் சூழ்ச்சித் திறனும் ஆட்சிப் பொறுப்பும் அறிந்தவர். அவர் நியமனமே கிளைவால் தொடங்கப்பெற்ற ஆங்கில ஆட்சியை இந்தியாவில் நிலைநிறுத்தியது எனலாம் வங்காளத்தில் ஹேஸ்டிங்ஸ் கை மேலோங்குவதைக் கண்ட தென்னாட்டு ஹைதரும் பிறரும் தலை சாய்ந்தனர். ஹேஸ்டிங்ஸுக்குப் பிறகு கம்பெனியார் ஆட்சி நாள்தோறும் வளர விரைவில் பரந்த பாரதநாடு முழுவதும் ஆங்கிலேயர் வசமாயிற்று. அதுவரை பிற பாரத நாட்டு எல்லையொடு கலக்காது தனியாய் இருந்த நம் தமிழகமும் அவர் ஆட்சியில் ஒன்றாகிப் பாரதத்தோடு இணைந்ததாகிவிட்டது. வட நாட்டவரையும் வென்று தன்னடிப்படுத்தி நின்ற தமிழகம், இக்காலத்திலேதான் வெளி நாட்டவருக்கு அடிமையாகி, அவர் ஆட்சியும் தன் எல்லையில் இல்லாதிருக்க, வடக்கே 300 கல்லுக்கு அப்பாலுள்ள தலைநகரைத் தன் தலைவிதியை உறுதி செய்யும் எல்லைக்கல்லாக முதன் முதலாக ஏற்றுக்கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/339&oldid=1359022" இலிருந்து மீள்விக்கப்பட்டது