பக்கம்:தமிழக வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழக வரலாறு


யாடற்புராணம் போன்ற புராண இலக்கியங்களில் வரும். சிறுசிறு கதைகளும் அந்தத் துறையில் வைத்து எண்ணப்படுபவையே, நாட்டில் உள்ளடங்கிய பல கிராமங்களில் மிகு பழங்காலத்தனவாக வைத்துப் பேசப்படும் கதைகளும் அந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் காட்டுவனவேயாம். இன்னும் செங்கோன் தரைச் செலவு போன்ற நூல்களும் வேறு சில குறிப்புக்களும் அவற்றோடு சேர்த்து எண்ணத்தக்கனவே.

எழுத்தின் அமைப்பும் மொழியின் வளர்ச்சியும் :

அடுத்து எழுத்தின் உருவமும் மொழியின் அமைப்பும் கொண்டு வரலாற்றைக் கணிப்பதும் உண்டு, உலக மக்கள் இனத்தையே பல பிரிவுகளாகப் பிரித்து வைக்க வழி காட்டுவது மொழியேயாம் இந்திய நாட்டில் திராவிட மொழிக் குடும்பமும், ஆரிய மொழிக் குடும்பமும் வாழ்கின்றன. அவை தோன்றிய நாள் கொண்டும், ஒன்றை ஒன்று பற்றிய நாள் கொண்டும், அவற்றின் எழுத்துக்கள் அமைப்பு முறை கொண்டும், மாறி வரும் நிலைகொண்டுங்கூட நாட்டு வரலாற்றைக் காண்பது உண்டன்றோ. பிராகிருதம், தமிழ் வடமொழி இவற்றின் வேறுபாடுகளையும், ஒன்றோடு ஒன்று கலந்த நிலையின் மாறுபாட்டினையும் கொண்டு இந்நாட்டு வரலாற்றை மேனாட்டு வரலாற்று ஆசிரியர் ஆராய்ந்துள்ளனர் என்பதை அவர்தம் நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. உலகில் வழங்கும் மொழிகளையே பல்வேறு குடும்ப வகைகளாகப் பிரித்து, ஒவ்வொரு மொழிக் குடும்பமும் வளர்ந்த வரலாற்றையும், அவற்றைப் பேசும் மக்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்த வரலாற்றையும் விளக்கும் நூல்களும் உள்ளனவன்றோ! தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களையும், அவற்றில் பொறிக்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/34&oldid=1357045" இலிருந்து மீள்விக்கப்பட்டது