பக்கம்:தமிழக வரலாறு.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் ஆட்சி

341


சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமாய் மட்டும் இல்லை. ஆந்திரம், மலையாளம், கன்னடம், ஒரியா ஆகிய நான்கு மொழி பேசும் மக்களையும் பிரித்து அவருள் ஒவ்வொரு பகுதியினரைச் சென்னை மாநிலத்தோடு சேர்த்துவிட்டனர் ஆங்கில ஆட்சியாளர். அதைப் போன்றே தமிழ் நாட்டின் தென்கோடியாகிய குமரி முனையையும், அதைச்சார்ந்த நாட்டையும், செங்கோட்டையையும் மலையாளம் பெரும்பான்மையாய் வழங்கும் நாட்டொடு சேர்த்துவிட்டார்கள் இப்படித் தமிழ்நாடே துண்டாக்கப்பட்டது எனலாம். இத்துடன் தமிழ்நாட்டின் பகுதிகளாகிய புதுச்சேரியும் காரைக்காலும் அவர்களுக்குள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி பிரஞ்சுக்காரர் வசமாகித் தமிழ் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டுவிட்டன. இன்றும் பிரெஞ்சுக்காரர்கள் பொறுப்பை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்துச் சென்ற போதிலும், இன்னும் அவை தமிழ்நாட்டொடு இணையாமல் ஆட்சி வகையில் தனித்தே இயங்குகின்றன. தென்கோடியில் இருந்த குமரியும் பிறவும் அண்மையில் செய்த மொழி வழி மாநில முறைப்படி தமிழ்நாட்டொடு இணைந்து விட்டன. வடக்கில் எல்லையாய் இருந்த வேங்கடம் ஆந்திரர் வசம் சென்றுவிட்டது. சென்னையைத் தலை நகராகக்கொண்டு சென்னை மாநிலம், என்ற பெயரில் இன்று தமிழ்நாடு வாழ்கிறது. அண்மையில் ‘தமிழ் நாடு’ என்றே பெயர் பெற்றமை மகிழ்ச்சிக்குரியது

நேரடி ஆட்சி:

ஆங்கிலேயர் சில காலம் கல்கத்தாவைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்த பிறகு தில்லிக்குத் தம் தலைநகரை மாற்றிக்கொண்டனர். அப்போதும் சென்னையின் நிலை ஒன்றும் மாறவில்லை. சென்னை ஐந்து மொழிகள் வழங்கும் நாட்டின் தலைநகராகவே இருந்தது. எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/343&oldid=1359040" இலிருந்து மீள்விக்கப்பட்டது