பக்கம்:தமிழக வரலாறு.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

தமிழக வரலாறு


ஆளவந்தவர். அவர் இலக்கியக் கலை உளம் கொண்டு சாகுந்தலம் போன்ற வடமொழி இலக்கியங்களை மொழி பெயர்த்துக் கீழ்நாட்டுக் கலை நலத்தை மேல்நாட்டு மக்கள் அறியுமாறு செய்தவர். மெக்காலே புதிய மனு என்கின்றார் பணிக்கர் ஆம்! சாதியே கண்டறியாத தமிழ்நாட்டில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பால் வேறுபாடு கற்பித்துக் கொண்டு தாழ்ந்த மக்களை நசுக்கித் தமக்கு வேண்டியவற்றைப் பெற்று வாழும் வேறுபாட்டினைக் கண்ட மெக்காலே, மக்களினத்தில் வேறுபாடு காணலாகாது; மக்களாகப் பிறந்தவர் அனைவரும் சமமே என்பதைச் சட்டத்தால் நிலைநிறுத்தி அதன் வழி மக்களுக்குள் இருந்த ஏற்றத் தாழ்வைத் துடைத்து நின்றார். இவ்வாறு பல ஆங்கிலேயர்கள் நாட்டுக்கு நல்ல பணி செய்துள்ளார்கள். ஆங்கிலேயர் ஆட்சிமுறை பற்றிப் பலப்பல நுால்கள் வெளி வந்துள்ளன. எனவே, அது பற்றி நாம் இங்கு அதிகம் காண வேண்டா. அவர்களால் பெற்ற தீமைகளையுங்கூட இங்கே எடுத்துக் காட்டிக்கொண்டிருக்க வேண்டா. அவர்களால் நம் இந்தியநாடு–சிறப்பாகத் தமிழ்நாடு–பெற்ற நன்மை களை மட்டும் காண்போம்.

நற்செயல்கள்:

இக்காலத்தில் ஆட்சியின் எல்லை விரிந்துவிட்டது. வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி வரையிலும், மேற்கே ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே இந்தோசீனா வரையிலும் பரந்துள்ள ஒரு நிலப்பரப்பை ஆளும் பொறுப்பை ஆங்கிலேயர் மேற்கொண்டனர். எனவே அதற்கேற்ற வகையில் தம் பொறுப்பினை உணர்ந்து பல வகையில் ஆட்சியைப் பலப்படுத்தினர் சிறப்பாகக் காவல் வகையில் மிலிட்டரி பாதுகாப்பினைப் பெருக்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/346&oldid=1359051" இலிருந்து மீள்விக்கப்பட்டது