பக்கம்:தமிழக வரலாறு.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் ஆட்சி

345


அலுவலாளர்களை அதிகப்படுத்தினர் ஆங்கில நாட்டிலேயே அத்துறையில் பயிற்சி பெற்ற சிறந்த ஆங்கிலேயர்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி, அவர்கள் வழி நாட்டில் நல்ல முறையில் அமைதி நிலவப் பாடுபட்டனர். நாட்டின் பல பகுதிகளில் வாழும் இந்திய மக்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பல போர்ப்பயிற்சிக் கல்லூரிகள் ஏற்படுத்தினர். அவற்றுள் ஒன்று பெங்களூரில் இன்றும் நிலவுகிறது. இதைத் தவிர்த்து, போலீஸ் பயிற்சிக்கென்று தமிழ் நாட்டில் வேலூரில் ஒரு கல்லூரி நிறுவினர். அரவங்காட்டிலும் ஒரு பயிற்சிக் கல்லூரி உள்ளது. இப்படி முதலில் நாட்டின் அகப்புற அமைதிகளைக் காக்கும் காவற் படை, போர்ப் படை இரண்டையும் சீராக்கினர். இவை அவர்கள் ஆட்சியைக் குலையாமல் பாதுகாக்கத்தான் பெரும்பாலும் பயன்பட்டன என்றாலும், இவற்றின் இருப்பு இன்று உரிமைபெற்ற இந்தியாவையும் தலை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. தங்களிடம் சிறந்த போர்ப் படையும் போலீஸ் படையும் உள்ளன என்று விடுதலை நாட்டு வேந்தர்களை வீறு பேசச் செய்கிறது. திருவள்ளுவர் கண்ட நாட்டு அரண் வழியே ஆங்கிலேயர் அகப்பு அரண்களை நன்கு அமைத்துப் பாதுகாத்தனர்.

நாட்டு ஆட்சி:

நாட்டைப் பல மாவட்டங்களாகப் பிரித்தனர். எல்லா மொழிகளும் கூடிய சென்னை மாநிலத்தில் 25 மாவட்டங்கள் இருந்தன தமிழ் நாட்டில் மட்டும் பதினொரு மாவட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தண்டல் நாயகம் (Collector) தலைவராய் இருந்து அந்தந்த மாவட்டத்தின் நலன்களைக் கவனித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/347&oldid=1359053" இலிருந்து மீள்விக்கப்பட்டது