பக்கம்:தமிழக வரலாறு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்று மூலங்கள்

33


பட்டுள்ள எழுத்துக்களையும் கொண்டு, இன்னின்னார் காலத்து எழுந்த கல்வெட்டுக்கள் இவை இவை என்று காட்டி, காலத்தையும் வரலாற்றையும் வரையறுக்கின்றனர் ஆசிரியர்கள். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்ப மும், இந்தோ-ஆரிய மொழிக் குடும்பமும் தம்முள் கொண்டுள்ள ஒற்றுமை வேற்றுமைகளின் மூலம் இரண்டு பெருங் கண்டங்களின் வரலாறுகளே தீட்டப்படுகின்றனவன்றோ! மொழி ஆராய்ச்சி மிக்கு வளர்ந்துள்ள இந்நாளில், அம்மொழி ஆராய்ச்சியே மக்கள் வரலாற்று ஆராய்ச்சியாக அமைவதை அறியாதார் யார்? எகிப்து எழுத்துக்களும், சீன எழுத்துக்களும் பிறவும் ஆராய்ச்சியாளர்களை எவ்வளவு கைதுக்கி விடுகின்றன!

தமிழ் நாட்டிலேயும் மொழி காட்டும் வரலாறு மறக்க முடியாத ஒன்றல்லவா! குமரியோடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட வரலாறும் வேங்கடம் குமரி இடைப்பட்ட வரலாறும், இன்றுள்ள வரலாறும் நம் நாட்டை விளக்கும் சான்றுகளன்றோ! இனி, இத்தமிழ் எழுத்திலேயே ‘வட்டெழுத்து’ப் போன்றவை வாழ்ந்த காலமும் மாறிய காலமும் வரலாற்று எல்லைக்கு உட்பட்டனவே. தமிழ்மொழி வழங்கிய மேலைப் பகுதியில் சேய்மொழியென வேற்றுமொழி கால் கொண்டு ஓங்கி நின்ற நிலையும் மொழி வழி வரலாற்றைக் காட்டுவதுதானே? மிகு பழங்காலத்தில் மனித இனம் பிரிந்த அந்த வரலாற்றுக்கு முற்பட்ட நெடுங்காலத்தில்-இந்த மொழிகள் எவ்வெவ்வாறு பிரிந்த மக்களைக் காட்டிக் கொடுத்தும். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முதலியவற்றை எடுத்து விளக்கியும் நின்றன என்பதை அறிய முடியுமானால், நாம் இன்னும் அம்மொழிகளைப் போற்றுவோமல்லவா? இவ்வரலாறே மொழி அடிப்படை

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/35&oldid=1357052" இலிருந்து மீள்விக்கப்பட்டது