பக்கம்:தமிழக வரலாறு.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் ஆட்சி

351



சாதிபேதமற்ற ஒரு பண்டைய தமிழ்ச் சமுதாய நெறியை வளர்த்தவர்கள் ஆங்கிலேயர் என்பது உண்மையன்றோ!

கல்வித் துறையில் மட்டுமின்றிப் பல்வேறுவகைத் துறைகளிலும் ஆங்கிலேயர் மக்களை ஒன்றாக்கினர் எனலாம். இரயில்வேக்களும் தபால் தந்திப் பகுதிகளும் நெடுந் தொலைவில் உள்ள மக்களை ஒன்று சேர்த்தன. இரயிலில் சாதி வேறுபாட்டுக்கு இடமில்லை எச்சாதியாராயினும் ஒன்றாக உட்கார வேண்டிய நிலை உண்டாயிற்று. மேலும் குமரி முதல் இமயம் வரையில் விரைந்து சென்று அரசியற்பணி புரியவும், பிற வகையில் கலந்து நிற்கவும் அப்போக்குவரத்துக்கள் நன்கு பயன்பட்டன. அவை போன்றே நெடுந்தொலைவிலிருந்து செய்திகளை அனுப்ப அஞ்சல் நிலையங்களும், விரைவில் தந்திகள் அனுப்பத் தந்தி நிலையங்களும் பெரிதும் உதவின. இவ்வாறு பரந்த நிலப்பரப்பை இணைத்து ஆண்டதோடு, அவ்விணைப்பு பலப்படும் வகையில் பலப்பல புதுச் சாதனங்களை உதவி, அவற்றின் வழி ஆங்கிலேயர் மக்கள் ஒற்றுமையை வளர்த் தார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் இன்னும் பல்வேறு சீர்திருத் தங்களும் நடைபெற்றன. மிக அதிகமாக இல்லையேனும், சங்ககாலம் தொடங்கி, ஒரளவில் கணவனோடு எரி மூழ்கும் வழக்கம் நாட்டில் இருந்து வந்தது. ஆதிரை தீப்பாய்ந்ததும், பூதப் பாண்டியன் தேவியார் கூற்றும், பிற்காலச் சோழ அரசியார் ஒருவர் கணவனோடு எரி மூழ்கியதும் தமிழ்நாட்டில் பழங்காலமாகச் 'சதி' இருந்து வந்தது என்பதைக் காட்டுகின்றன. இந்த வழக்கம் வடநாட்டில் சற்று அதிகமாய் இருந்திருக்கும்; வற்புறுத்தலாலும் நடைபெற்றிருக்கும். ஆனால் அக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/353&oldid=1358839" இலிருந்து மீள்விக்கப்பட்டது