பக்கம்:தமிழக வரலாறு.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

தமிழக வரலாறு



கொடிய- வழக்கத்தைச் சட்ட அடிப்படையில் நிறுத்தியவர் ஆங்கிலேயர்களே. அவர்களுக்குத் துணையாய் நின்று பெரிதும் உதவியவர் ராஜாராம் மோகன் ராய் என்ற வட நாட்டவராவர். கலை வளர்ச்சி: கலைகளையும் பழம்பொருள்களையும் போற்றிப் புரப்பதில் ஆங்கிலேயர் அதிகக் கவனம் செலுத்தினர். இசுலாமியர் படை எடுப்பின்போது மதுரையிலும் பிற விடங்களிலும் சில கோயில்கள் அழிவுற்றன எனக் கண் டோம். ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் எல்லாக் கோயில்களும் நன்கு பாதுகாக்கப் பெற்றன. விக்டோரியா மகாராணியாரின் சாசனப்படி மக்களுடைய அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன. அத்துடன் தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களும் சாசனங்களும் பிற அனைத்தும் வெளிவர உதவியவர்கள் ஆங்கில அரசாங்கத் தவரே. கி.பி. 1834இல் ஜேம்ஸ் பிரின்சிப் என்பவர் அசோகர் கல்வெட்டைப் பற்றி அறிந்து நாட்டிலுள்ள கல்வெட்டுக்களையெல்லாம் ஆராய முனைந்தார். பழம் பொருள் ஆய்வுக் கழகம் ஒன்று நிறுவப் பெற்றது. 1836ல் அலெக்சாந்தர் கன்னிங்காம் என்பவர் அதன் தலைவராய் இருந்து பணியாற்றினார். பல பழம்பெருங் கல்வெட்டுக்களும், புதை பொருள்களும், அழிந்த சின்னங்களும், பிறவும் ஆராயப்பெற்றன. திராவிடரின் நீண்டகால வாழ்வையும், அவர்கள் சிந்து வெளியில் சிறக்க நின்ற நிலையையும் வெளி உலம் இன்று உணர்ந்து போற்றுமாறு செய்த பணி, இந்தப் பழம் பொருள் ஆராய்ச்சியின் பயனே என்பதை யாரே மறுக்க வல்லார் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேதான் கல்வெட்டுக்கள் அதிகம். கல்வெட்டுக்களைப் படி எடுப்பது அவ்வளவு எளிதன்று. அவற்றை எடுப்பித்து, அவற்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/354&oldid=1358845" இலிருந்து மீள்விக்கப்பட்டது