பக்கம்:தமிழக வரலாறு.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் ஆட்சி

355

கள்தம் அடி ஒற்றி இன்னும் பலர் பலப்பல் சிற்றிலக்கியங்களை எழுதினர். இவர்கள் காலத்தில் அச்சும் உடன் வந்தமையின் நூல்களை அச்சிட வாய்ப்பும் உண்டாயிற்று. அந்த வாய்ப்பின் வழியே கல்வியும் இலக்கியமும் வளரலாயின. இவர்கள் காலத்தில் தமிழ் இலக்கியத்தில் மற்றொரு புதுத்தோற்றம் அதன் உரை நடை நூல்களாகும். சிலப்பதிகாரம் தொடங்கி உரை, பாட்டுடன் விரவியதோடு, உரையாசிரியர்கள் உரை நடைகளும் நாட்டில் இருந்தன. எனினும் உரைநடையில் தனி நூல் இல்லை. முதன்முதல் இத்தாலிய நாட்டுப் பெஸ்கி என்ற வீரமாமுனிவரே தமிழில் உரைநடை நூல் எழுதினாரென்றும், அது சிறுகச் சிறுக வளர்ந்து இருபதாம் நூற்றாண்டின் இடையில் மிக உயர்ந்து வளர்ச்சியுற்றுச் செய்யுள் நடையை மறக்கும் வகையில் மேன்மையுற்றது என்றும் காண்கின்றோம் பல்வேறு செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் அச்சேறி ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் ஒரு நூலைப் பயில வழி உண்டாயிற்று. இசுலாமிய சமயத்தில் சீறாப் புராணம போன்ற இலக்கியங்களும, கிறித்து சமயத்தில் தேம்பாவணி, கித்தேரி அம்மானை, திருக்காவலூர்க் கலம்பகம், இரட்சணிய யாத்திரிகம் போன்ற செய்யுள் நூல்களும் இக்காலத்தில் உண்டாயின. இன்னும் கிறித் தவ சமயத்தவரும் அச்சமயத்தைச் சார்ந்த மேலை நாட்டினரும் தமிழுக்குச் செய்த சிறந்த தொண்டுகள் பலப்பல. எனவே, இக்காலத்தில் பிற வளர்ச்சிகளோடு தமிழ் இலக்கியமும் வளர்ச்சியுற்றது.

தமிழ் வளர்ச்சி:

இலக்கிய வளர்ச்சியோடு தமிழ்மொழியை விரிந்த உலக அரங்கு ஏற்றிய பெருமையும் இவ்வாட்சிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/357&oldid=1358883" இலிருந்து மீள்விக்கப்பட்டது