பக்கம்:தமிழக வரலாறு.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

361

யர்கள்பெரும்பங்கு கொண்டு உழைத்தனர். இந்தியர்களும் அதில் கலந்திருந்தனர். அந்தக் கழகமே பின் 'இந்தியன் நேஷனல் காங்கிரஸ்' என்ற பெயரில் உருமாறி 1947இல் வெள்ளைய ராட்சியை விரட்டி விடும் என்று அன்று யாருமே நினைத்திருக்க முடியாது. இத்தியன் நேஷனல் காங்கிரஸ் என்ற பெயரில் அது மாறின போதும் அதில் பல ஆங்கிலேயர்கள் பங்கு கொண்டே இருந்தனர். 28-12-1885இல்தான் 'இந்திய நேஷனல் காங்கிரஸ்' மகாசபை அமைக்கப் பெற்றது எனலாம். அப்போது அதில் 72 உறுப்பினர் இருந்தனர். அவர்கள் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்தவர்கள். அன்று தோன்றிய காங்கிரஸ் சிறுகச்சிறுக வளர்ச்சியடைந்து வெள்ளையனை நாட்டை விட்டே துரத்தும் என எண்ணி இருக்கமுடியாது. அதனுடைய வளர்ச்சியும் அவ்வளவு விரைவாக இருந்தது என்று சொல்லமுடியாது. முதல் உலகப்போர் காங்கிரஸ் சக்தியை வளர்த்தது எனலாம். அத்துடன் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள் நாட்டுக் கலகம் இந்தியக் கைத்தொழிலை-சிறப்பாக நெய்தற்றொழிலை-வளர்த்தது எனலாம். அதற்குமுன் இங்கிலாந்தில் பெரிய ஆலைகளை ஏற்படுத்தி அவற்றின் உற்பத்திகளை இந்தியாவிற்கே இறக்குமதி செய்து வந்தார்கள். எனினும், முதல் உலகப் போருக்குப் பின்னும் ஆப்பிரிக்க உள் நாட்டுக் கலகத்துக்குப் பின்னும் இந்தியா விலும் வடக்கே பம்பாய்,ஆமதாபாது முதலிய இடங்களில் ஆலைகள் வளரத் தொடங்கின. அக்காலத்திலெல்லாம் தமிழ்நாட்டில் எண்ணத்தக்க அளவுக்குப் பெரு ஆலைகள் வளர்ச்சி பெறவில்லை. சற்றுப் பின்னரே கோவை, மதுரை முதலிய இடங்களிலே ஆலைகள் வளர்ச்சியுற்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/363&oldid=1358955" இலிருந்து மீள்விக்கப்பட்டது