பக்கம்:தமிழக வரலாறு.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

தமிழக வரலாறு


காங்கிரசுக்குச் சிறந்த சஞ்சீவியாய் இருந்தது என்கிறார் நேரு அவர்கள்.[1]

காந்தி அடிகள் காங்கிரஸ் அமைப்பில் சேர்ந்த பிறகு அதன் அமைப்பே மாறிவிட்டது எனலாம். அவர் ஆங்கில அரசாங்கத்தை நாட்டை விட்டு அகற்றவேண்டிய பணிகள் எவை எவை என ஆராய்ந்து, அமைதியான முறையிலே வெற்றி பெற வழி உண்டா எனக்கண்டு கொண்டே இருந்தார். வடவிந்தியாவில் காந்தி அடிகள் அகிம்சை வழியில் வெற்றிகாண முயற்சி செய்து கொண்டிருந்த அதே வேளையில் மற்றோர் இயக்கம், வேறு வழியில் செயலாற்றிக்கொண்டே இருந்தது. அது தான் முஸ்லீம் லீகு என்ற வகுப்புவாதத் தாபனமாகும். அது முஸ்லீம் மக்கள் நலனுக்கெனவே பாடுபட்டதோடு, மற்ற வரை வேறுபடுத்திப் பிரிக்கும் வகையிலும் இருந்தது எனலாம். அதனுடைய முயற்சியே 1947ல் இந்தியா ஒன்று என்று இராமல், இரண்டாக்கப் பெற்று ‘பாகிஸ்தான்’ என்ற புது நாடு உருவாவதற்கு முக்கிய காரணமாயிருந்தது. எனினும் தமிழ்நாட்டில் அத்தகை வேறுபாட்டு உணர்ச்சி அதிகமாகத் தலைஎடுக்கவில்லை. சில இடங்களில் முஸ்லீம் இந்துக்கள் வேறுபாடு முளைத்ததென்றாலும், அவ்வேறுபட்ட நிலை நெடுநாள் நீடிக்காத வகை


  1. “And then Gandhi came. He was, like a powerful current of fresh air that made us stretch ourselves and take deep breaths, like a beam of light that pierced the darkness and removed the scales from our eyes, like a whirlwind that upset many things but most of all the working of people's mind. He did not descend from the top; he seemed to emerge from the millions of India, speaking their language and incessantly drawing attention to them and their appalling condition – The Discovery of India, p. 361
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/366&oldid=1376075" இலிருந்து மீள்விக்கப்பட்டது