பக்கம்:தமிழக வரலாறு.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

369


பல தலைவர்கள் அக்கொள்கையை மறுத்தபோதிலும் கடைசியாகத் தேர்தலில் தலையிட்டு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவே ஏற்கப்பட்டது. அதன்படி அடுத்து 1936ல் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. சிந்து, வங்காளம், பஞ்சாபு ஆகிய மூன்று மாகாணங்களைத் தவிர பிறவற்றில் காங்கிரசே பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. சென்னையிலும் காங்கிரஸ் ஆட்சி தொடங்க ஏதுவாயிற்று. அதன்படியே முதன்முதல் காங்கிரஸ் ஆட்சியில் C.இராசகோபாலாசாரியார் தலைமையேற்றுத் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பை மேற்கொண்டார்.

எதிர்பாராத வகையில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. இது உலக நிலையையே மாற்றிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் இடையில் நடைபெறும் நாட்டுப் போர்கள் விரைவில் உலகப் போர்களாக மாறிவிடுதல் தவிர்க்க முடியாததாகும். அந்த நிலையில் மேலைநாட்டில் உண்டாகிய சிறுபோர் உலகநாடுகளை யெல்லாம் பற்றியது. சில நேர்முகமாக ஈடுபட்டன. சில மறைமுக மாக உதவும் வகையில் ஈடுபட்டன. இந்தியா இந்தப் பெரும் போரில் கலந்து கொள்வதா வேண்டாவா என்ற நிலை உண்டாயிற்று. காங்கிரஸ் வேண்டா என்ற கொள்கையை வற்புறுத்தியது. ஆங்கில ஆட்சி, இங்கிலாந்து, தானே நேரில் போரில் கலந்து கொண்ட காரணத்தால், இந்தியாவும் கலக்க வேண்டும் என விரும்பிற்று.அதனால், வேறுபாடுற்று மத்திய, மாகாண காங்கிரஸ் மந்திரி சபை கள் 1942-ல் ராஜிநாமா செய்தன. அத்துடன் போருக்கு உழைக்க வேண்டாத நிலையில் பெரும் புரட்சி இயக்கம் தொடங்கிற்று. 1942 ஆகஸ்டு போராட்டத்தில் பலப்பல காங்கிரஸ்காரர் சிறைப்பட்டனர். அவருள தமிழர் பலர். தமிழ்நாட்டிலும் எத்தனையோ இடங்களில் ஆகஸ்டு

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/371&oldid=1359095" இலிருந்து மீள்விக்கப்பட்டது