பக்கம்:தமிழக வரலாறு.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

371


கப்பெற, காங்கிரஸ் மந்திரிசபை அமைக்கும் நிலையில் இல்லை. பின்னர்த் தமிழ்நாட்டு காங்கிரஸ், கவர்னர் ஜெனரலாய் இருந்து விலகி ஒய்வுற்ற C. இராசகோபாலாசாரியாரை அழைத்து வந்து சில தனி உறுப்பினரை உடன் சேர்த்துக்கொண்டு காங்கிரஸ் ஆட்சியை நிறுவிற்று. அடுத்து ஆந்திரநாடு தனியாகப் பிரிந்த பின் காங்கிரஸ் பெரும்பான்மை ஆளும் கட்சியாகிவிட, அன்று தொடங்கி காமராசர் முதல் அமைச்சராய் இருந்து வருகிறார். (1958ல்)[1]

1926ல் காங்கிரசை விட்டு வந்த ஈ. வே. ரா. என்னும் இராமசாமி நாயக்கர் அவர்கள், அன்று தொட்டு, பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாட்டுக்காகவே பிரிந்து நின்று பாடுபட்டார். ஆனால், அக்கட்சி பின்னால் வேறு வகையில் உருப்பெற்று வளரத் தொடங்கியது. ‘வடக்கு, தெற்கு’ என்ற வேறுபாடுகாட்டி, வடநாட்டவர் தென்னாட்டவரைப் பலவகையில் தாழ்த்துவதாலும், வட நாட்டு ஆட்சியாளர் வழியே தமிழ் வாழவேண்டியிருப்பதனாலும், தென்னாடு-சிறப்பாகத் தமிழகம்-வடநாடு ஆட்சியிலிருந்து விடுபடவேண்டும் என்ற கொள்கையை நாட்டில் ஈ. வே. ரா. வளர்த்து விட்டார். வடநாடு, தென்னாடு என்ற இந்த வேறுபாட்டைத் தவிர்த்து, திராவிடர் ஆரியர் என்ற கொள்கையை விளக்கி அதன் வழியே தமிழ்நாட்டில் வாழும் பிராமணரல்லாதார் அனைவரும் திராவிடர் என்ற கொள்கையில் தம் கட்சியை உருவாக்கினார். இவர்தம் கட்சிக்கு முதலில் “சுயமரியாதை இயக்கம்” எனப் பெயரிட்டார். பின்னர் அது 'திராவிடக் கழகம்' என்ற பெயரைத் தாங்கி, “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற அடிப்படையில் பணியாற்றிற்று. அதில் இருந்து சிற்சில வேறுபாட்டுக் கொள்கைகளுக்காகப் பிரிந்ததே “திராவிட முன்னேற்றக் கழகம்” வடக்குத்-


  1. முதல் பதிப்பு 1958-ல் வெளி வந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/373&oldid=1376094" இலிருந்து மீள்விக்கப்பட்டது