பக்கம்:தமிழக வரலாறு.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

375


அரசாங்கத்தாரும் அரசாங்க நடவடிக்கைகளைத் தமிழில் நடத்த முன்வந்துள்ளனர். இந்திலையில் இன்று ‘சென்னை மாநிலம்’ என்ற பெயரில் தமிழ்நாடு காங்கிரஸ் அமைச்சர்களால் ஆளப்பெறுகின்றது. (இன்று தமிழ்நாடு என்ற பெயருடன் திராவிட முன்னேற்றக் கழகத்தாரால் ஆளப்பெறுகின்றது.) (1971)

இன்றைய இலக்கிய வளர்ச்சி:

இக்காலத்திய இலக்கியமும் கலையும் வளர்ந்த நிலை காண்போம். ஆங்கிலேயர் காலத்தில் உரை நடையும், மொழி பெயர்ப்புகளும், சமயச் சார்பான புது இலக்கியங்களும் தோன்றின. உரைநடை முறை நாளாக ஆகப்பெருகிற்று எனலாம். இக்காலத்தில் நாளிதழ்களும், கிழமை, திங்கள் இதழ்களும் தோன்றலாயின. பத்திரிகை படிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் தோன்றியது. மேலை நாடுகளில் பத்திரிகை வளர்ச்சியுற்றது போன்று ஈண்டு அத்துணை வளர்ச்சி பெறாவிடினும், ஆங்கிலத் திலும் தமிழிலும் சில நாளிதழ்களும், சில வார, திங்கள் இதழ்களும் தோன்றின. தமிழில் உரைநடையை வளர்த்ததில் அவற்றிற்குப் பெரும்பங்கு உண்டு எனலாம். மற்றும் சிலர், உரைநடை நூல்களைத் தனியே எழுதவும் தொடங்கினர். ஆகவே, இருபதாம் நூற்றாண்டில் உரைநடை நன்கு வளர்ந்தது எனலாம். அத்துடன் உரிமைபற்றிய முழக்கங்களும் பாட்டாகவும் உரைநடையாகவும் வந்தன. பக்திப்பாடல்களை இறுதியாகத் தமிழ் நாட்டில் பாடி விட்டுச் சென்றவர் இராமலிங்க அடிகளாராவர். சாதி சமய வேறுபாடற்ற சமுதாயமும், அதன் வழியே பரந்த ஒளி வழிபாடும் மாந்தரை உய்விக்கும் வழிகள் என்ற உண்மை உணர்ந்து, எளிமை வாழ்வில் வாழ வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/377&oldid=1359098" இலிருந்து மீள்விக்கப்பட்டது