பக்கம்:தமிழக வரலாறு.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

தமிழக வரலாறு


இசையும் நாடகமும்:

எனினும், இசையும் நாடகமும் நன்கு வளர்ச்சி அடையவில்லை எனலாம். வானொலி மூலம் நாடகங்களை வளர்க்கின்றார்கள். என்றாலும் அது போதிய வளர்ச்சியாகாது. நாட்டில் நாடக நூல்கள் வளரவில்லை எனலாம். சம்பந்த முதலியார் அவர்கள் பல நாடகங்களை எழுதினார் என்றாலும், அவை கால வெள்ளத்தைக் கடந்து வாழவில்லை என்பது கண்கூடு. இசையும் அத்துணை வளர்ச்சி பெறவில்லை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முயன்று வெளியிட்ட சில இசை நூல்களைத் தவிர்த்து வேறு நூல்கள் இசையில் வெளிவரவில்லை எனலாம். தமிழ் இசைச் சங்கம், தமிழில் இசைபாடும் பண்பினை வளர்த்து வருகின்றது. தமிழ் நாட்டில் தமிழில் இசைபாடுதல் இழுக்கு என்று இருந்த நிலை மாறி, தமிழிலேயே இசைபாடும் நிலை ஓரளவு நாட்டில் உண்டாகியதற்குக் காரணம் தமிழிசைச் சங்கம் எனலாம். என்றாலும், போதிய வளர்ச்சி இல்லை. வானொலி வழியே இன்னும் தமிழ் இசையையும், நாடகத் தமிழையும் வளர்க்க வழி உண்டு.

இன்றைய நிலை:

இவ்வாறு முத்தமிழும் இன்று வளர்ந்து வருகின்றன. மக்களும் ஓரளவுக்கு உரிமை வாழ்வை நினைக்கின்றனர். எனினும் மக்களது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் பிற வேறுபாடுகளும் நீங்கவில்லை எனலாம். சாதிசமயப் பூசல்கள் தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், சங்க காலத்தைப் போன்று அவை அடியோடு நாட்டில் இல்லை என்று சொல்ல முடியாது. சிலர் மேடைமேல் பேசும் அளவுக்கு வாழ்வில் வாழ்ந்து வழி காட்டுவது இல்லை மக்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/380&oldid=1359106" இலிருந்து மீள்விக்கப்பட்டது