பக்கம்:தமிழக வரலாறு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்று மூலங்கள்

41


தாழிகளைக் கொண்டே பழங்காலத் தமிழ்நாட்டு, எகிப்திய நாட்டு வரலாறுகள் கணிக்கப் பெறுகின்றன. தமிழ் நாட்டில் ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட புதை பொருள் போன்றவைகளே மேலை நாட்டு வரலாற்று ஆசிரியர்களாகிய ஸ்மித்து போன்றார் மனத்தையும் கவர்ந்துள்ளமை உலகறிந்த ஒன்று இத்தாழிகளின் அமைப்பும் இவற்றில் தீட்டப்பட்ட கலை நலம் கனிந்த வண்ண ஓவியங்களி சிறப்பும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வரலாற்றை உலகுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன அன்றோ!

கட்டடங்களும் கலைகளும் :

நிலத்தை அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட மேற்கண்ட புதைபொருள்களேயன்றி, நிலத்தின் மேல் நிமிர்ந்து நிற்கும் கட்டடங்களும் அவற்றின் கலைகளுங்கூட வரலாற்றுக்குத் துணை புரிகின்றன. மாமல்லபுரக் கோயில்களும் அஜந்தாக் குகைகளும் சிற்றன்ன வாயிற் சித்திரங்களும் வானோங்கிய குதுபுமினார், அசோக ஸ்துபிகள் போன்றவையும் வரலாற்றுப் பாதையின் மைல்கற்கள் தாமே? அவற்றின் மூலம் எத்தனை எத்தனை உண்மைகளை உணர்ந்து கொள்ளுகின்றோம்! சிற்பங்களையும் கலை அமைப்புக்களையும் கண்டு, அவற்றைத் தோற்றுவிக்கக் காரணராயிருந்த அரசர்களைப் பற்றியும், தோற்றுவித்த கலைஞர்களைப் பற்றியும், அவற்றின் மூலம் அக்கால மக்களது கலை உணர்வு, கலை ஆர்வம் முதலியன பற்றியும் அறிந்து கொள்ளுகிறோம் சித்திரங்களுக்கு இட்டுள்ள ஆடை அணி முதலியவற்றாலே அக்கால மக்கள் வழக்கிலிருந்த ஆடை அணிகளைப்பற்றி அறிந்து கொள்ள முடிகிறதன்றோ! இன்னும் அவற்றின் மூலம் அக்காலச் சமய நெறி, வாழ்ந்த வகை முதலியனவும் நமக்கு நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/43&oldid=1357189" இலிருந்து மீள்விக்கப்பட்டது