பக்கம்:தமிழக வரலாறு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழக வரலாறு


பரந்த உலக வரலாற்றை நிறுத்தி, தமிழக வரலாற்றுக்கு நிலப் பிரிவுகள் எந்த அளவு உதவுகின்றன என்பதைக் காணலாம்.

தமிழக நிலப் பிரிவுகள் :

தமிழ் நாட்டில் நிலத்தைப் பாகுபடுத்தியுள்ள முறையே வரலாற்றில் முதல் இடம் பெறுவதாகும். நிலத்தை ‘நானிலம்’ என்றே வழங்கி, இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அதை நால்வகையாகப் பிரித்துள்ளார்கள் பழந்தமிழ் மக்கள். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், என்ற நால்வகைப் பகுப்பே நாட்டு மக்கள் வாழ்க்கையை நன்கு விளக்கிக் காட்டுகின்றது. இந்நிலப் பிரிவுகளுக்கு ஏற்பவே இவற்றில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளும், இயல்புகளும், பிறநெறிகளும் அமைகின்றன. இந்நான்கு வகை நிலங்களும் இவற்றின் சிதைவால் தோன்றும் பாலையுமே தமிழ் இலக்கியத்தில் ‘ஐந்திணை’யாகக் காட்சியளிக்கின்றன. இவ்விலக்கியங்கள் நாட்டின் வாழ்வை ஒளி பெறக் காட்டும் விளக்கங்களாய் அமைகின்றன. இவற்றைக் கொண்டுதானே இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் தமிழக வரலாற்றை ஒருவாறு சீர்படுத்தி எழுத முடிகின்றது! எனவே, நில அமைப்பும் நிலப்பிரிவுகளும் தமிழ்நாட்டு வரலாற்றுக்கு இன்றியமையாதவை ஆகின்றன. ஒவ்வொரு நிலத்தையும் – திணையையும் – எடுத்து அதில் வாழும் மக்களைப் பற்றி ஆராய்ந்து எழுதின், அதுவே தமிழக வரலாறு ஆக முடியும்.

ஐவகை நிலம் :

இந்த நிலப் பாகுபாடு என்று உண்டானதோ நாமறியோம். ஆனால், இந்தப் பாகுபாட்டு முறைதான் எத்துணைப் பொருத்தமாய் அமைந்துள்ளது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/50&oldid=1357256" இலிருந்து மீள்விக்கப்பட்டது