பக்கம்:தமிழக வரலாறு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நில நூலும் வரலாறும்

53


அமைப்பும் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்ப மாறுபாடு அடைவது வரலாறு கண்ட உண்மையாகும்.

மேலும், நில அமைப்பில் எத்தனையோ மாறுபாடுகள் நிகழ்கின்றன. சில புதியனவாகத் தோன்றுகின்றன; சில அழிகின்றன. தமிழ்நாட்டு எல்லை ஒரு காலத்தில் பரந்து இருந்ததெனவும், மேற்கே மடகாஸ்கர் தொடங்கிக் கிழக்கே ஜாவா வரை அகன்ற நிலப்பரப்பு இருந்ததெனவும், அது பல ஊழிகளால் அழிக்கப் பெற்றதெனவும் அறிகின்றோம். உலகில் இன்னும் எத்தனையோ நிலப்பரப்புக்கள் தோன்றி அழிந்தன. இன்று உலகம் போற்ற உயர்ந்து நிற்கும் இமயம் கடலுள் ஆழ்ந்திருந்த காலமும் இருந்தது. இப்படி நில மாறுபாடு வரலாற்றில் நிலைத்த இடம் பெற்றுள்ளது. நம் நாட்டுப் புகார் எங்கே? பல்லவர் போற்றிப் பாராட்டிய கடல் மல்லை எங்கே? ஆம்! அவை அழிந்து விட்டன. நில நூல் வழிப்படி, ஆனால், வரலாற்று வழிப்படி அவை அழியவில்லை. இன்னும் வரலாறு அவற்றின் புகழை வாழ வைக்கின்றதன்றோ!

தமிழகம் :

தமிழர் என்றவுடன் வேங்கடம் குமரி இடைப்பட்ட நாட்டில் வாழ்பவர் என்று முடிவு கூறுவர். இந்தப் பகுதிக்குத் தமிழ் நாடு என்பது பெயர்தான். ஆனால், தமிழர் வாழ்வு இந்த எல்லையில் அமைந்துவிடவில்லை. பரந்த நிலப்பரப்பில் உள்ள நாகரிகம். அண்டை நாடுகளில் பரவுவது இயல்புதானே! இலங்கையிலும் பர்மா, மலேயாவிலும் தமிழர் நாகரிகமும் பன்பாடும் நிலவியுள்ளதை அறியாதார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/55&oldid=1357285" இலிருந்து மீள்விக்கப்பட்டது