பக்கம்:தமிழக வரலாறு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழக வரலாறு


தொடங்குமுன், பனி படர் காலம் ஒன்று இருந்தது. என்பர் வரலாற்றாளர். அதன் காலம் இன்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை முன்னர்க் கண்டோம். அக்காலத்திலெல்லாம் தமிழ் நாட்டைப் பற்றி–ஏன்?–உலகத்தைப் பற்றியே ஒன்றும் தெரியாது உலகமே இன்றிருக்கும் நிலையில் அன்று இல்லை. குமரி முனைக்குத் தெற்கே பரந்த நிலப்பரப்பு இருந்ததென்றும் விந்தியத்துக்கு வடக்கே ஆழ்கடல் இருந்ததென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்தப் பரந்த நிலப் பரப்பிலேதான் மனிதன் முதலில் தோன்றினான் என்பர் சிலர். அவை அனைத்தும் அப்படியே உண்மை என்று கொள்ள இயலாவிட்டாலும், தமிழ் மண் மிக்க தொன்மை வாய்ந்தது என்பதை மறுப்பார் ஒருவரும் இலர். இம்மண்ணில் பனி படர் காலத்துக்குப் பின் உயிர் தோன்றி வளர்ந்து மனிதன் நிலைபெற நெடுங் காலம் ஆகியிருக்கும். பின்னர்க் கற்காலமும், செம்பு இரும்புக் காலங்களும் பிறவும் தோன்றித் தோன்றிக் கழிந்திருக்க வேண்டும். ஆதி காலத்தில் தோன்றிய மனிதன் அன்றும் இன்றே போல அனைத்து நலன்களும் நிரம்பப் பெற்றவனாகக் கட்டாயம் இருந்திருக்க முடியாது. அவனது தொடர்ந்த வளர்ச்சியைக் காட்டுவதே வரலாற்று நூல்.

மனித உணர்வு பெற்ற பின் :

விலங்கென வாழ்ந்த மனிதன்–தமிழ் மண்ணில்–சிறுகச் சிறுக மனித உணர்வு பெற்று வாழத் தொடங்கியிருப்பான். தனித்து வாழ்ந்தவன் சேர்ந்து வாழக் கற்றுக் கொண்டான் பின்பு ஊர், நகரம், நாடு போன்றவை தோன்றின. ஆனால், இத்தனை வேறுபாடுகளுக்கிடையில் எத்தனையோ கணக்கில் அடங்காத ஆண்டுகள் கழிந்தி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/62&oldid=1357325" இலிருந்து மீள்விக்கப்பட்டது