பக்கம்:தமிழக வரலாறு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு வரலாறு

61


ருக்கும் என்பது உண்மை. அந்த ஆதி மனிதன், பின் வேற்று மண்ணிலிருந்து வந்து சேர்ந்த மனிதனோடு கலந்து பழக நெடுங்காலம் சென்றிருக்கும். மனிதன் சமுதாயமாக வாழக் கற்றுக் கொள்ளப் பலப்பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தையெல்லாம் வரலாற்று ஆசிரியர் கற்காலம் என்றும், எலும்புக் காலம் செம்பு இரும்புக் காலங்களென்றும் எழுதி வைத்துள்ளனர். அவற்றைப் பற்றியெல்லாம் வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகத்தில் சிறக்கக் காணலாம்.

தமிழ்க் குடிகள் :

‘இனி, இங்கு இன்று வாழும் மக்களினமாகிய தமிழ்க் குடிகள் இந்த நாட்டிலேயே பிறந்தவர்களா, அன்றி வெளி நாட்டிலிருந்து வந்தவர்களா என்ற ஆராய்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை. இவர்கள் இந்நாட்டிலேயே தோன்றி வளர்ந்தவர்கள் என்று ஒரு சாராரும், ‘ஆரியர் இந்திய மண்ணில் வருமுன் அவர்களைப் போன்றே வடமேற்குக் கணவாய் வழியாக வந்தவர் என மற்றொரு சாராரும் வாதிப்பர். எது பொருந்தும் என்பதை ஆராய்ந்து முடிவு காண வேண்டும். குமரிக்குத் தெற்கே இருந்த நிலப்பரப்பே தொன்மை வாய்ந்தது என்று காண்பதால் மக்கள் அங்குத் தோன்றியே பின்னர்ப் பிற இடங்களுக்குச் சென்றிருப்பார்கள் என்று கொள்ளல் பொருந்தும்.

இந்த மனித இனத்தைப்பற்றிப் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இடையே தமிழ் இலக்கியங்களும் தோன்றி வந்துள்ளன. தொல்காப்பியர் காலத்தைத் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றே கூறுவர். அத் தொல்காப்பியம் இலக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/63&oldid=1357331" இலிருந்து மீள்விக்கப்பட்டது