பக்கம்:தமிழக வரலாறு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு வரலாறு

63


புலப்படும். அச்சங்க காலத்திலேதான் பல வெளி நாட்டார் இங்கு வந்து தங்கி, வாணிப வளனையும், பிற துறைகளையும் வளர்த்துச் சிறக்கச் செய்துள்ளனர். இன்று உலகில் போற்றப்படும் உயர்ந்த இலக்கியங்களுள் சிறந்த தமிழ் இலக்கியமெல்லாம் அக்காலத்தனவே அக்காலத்தில் ஆண்ட முடியுடைய மூவேந்தர்தாம் இமயம் வரையில் படை எடுத்துச் சென்று, ‘கயல் எழுதிய இமய நெற்றியின்’ அயலில் புலியும் வில்லும் பொறித்தனர் தமிழ் நாகரிகம் என்ற தனி நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டிய காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் ‘பொற்காலம்’ என்று கூறுவது பொருந்துமன்றோ!

இருண்டகாலம் :

தனி மனி தனது வாழ்விலே இன்பம் தன் உச்சியின் எல்லையில் நிற்பின் உடனே தாழ்வு வந்துறுதல் இயல்பாகும். மனிதரின் வாழ்வு மேடு பள்ளங்கள் நிறைந்ததே. அம்மனித வாழ்வின் மேடு பள்ளங்களைப் போன்றே வரலாற்றிலும் மேடு பள்ளங்கள் உள்ளன. சிறந்த பொற்காலமாகிய சங்க காலத்துக்குப் பின் தமிழ் நாட்டு வரலாற்றில் இருண்ட காலம் என்று ஒன்று வந்து சேர்கின்றது. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அக்காலத்தைக் களப்பிரர் இடையீட்டுக் காலம் (Kalabras Interregnum) என்பர். தலை நிமிர்ந்து தனியரசோச்சிய சங்க காலத் தமிழ் மரபு கெட, இடையில் ஒரு சில வெளி நாட்டினர் நாட்டில் நுழைய, நாட்டு வரலாறே நலியுறும் நிலை உண்டாயிற்று. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் (கி.பி 3-4-5) தமிழ் நாட்டில் என்ன நடைபெற்றது என்றே சொல்ல முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்தி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/65&oldid=1357341" இலிருந்து மீள்விக்கப்பட்டது