பக்கம்:தமிழக வரலாறு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

79


விட்டன. இந்நிலத்தில் மனிதன் எப்போது தோன்றினான்? எப்படி வளர்ந்தான்? அவன் தோன்றுமுன் வாழ்ந்த உயிர்கள் யாவை? அம் மனிதன் இங்கேயே தோன்றினானா? அல்லது வேறு பகுதியிலிருந்து வந்தானா? இவை போன்ற கேள்விகளுக்கு விடை இறுத்தல் எளிதன்று. எனினும், உலக உயிர்த் தோற்றத்தையும், மனித வளர்ச்சியையும் துணைக் கொண்டே ஒருவாறு நம் நாட்டு வளர்ச்சியையும் காணலாம். நாம் முன் கண்டபடி இன்றைக்கு 50.000 ஆண்டுகளுக்கு முன் பனிபடு காலமாய் இருந்தது கி. மு. 60,000 முதல் 50,000 வரை பனிபடு காலமென்பர் வெல்ஸ், கார்டன் சைல்டி போன்ற பேராசிரியர்கள்[1] அதற்குமுன் உலக நிலை என்னவென்பது கூற இயலாது. உலகம் தோன்றிக் கோடிக்கணக்கான ஆண்டுகள் கழிந்திருந்த போதிலும் இன்றைய மனித அறிவின் எல்லை அந்தக் குறுகிய பனி படு கால எல்லையிலேதான் முடிகின்றது. அந்தப் பனிபடு காலத்துக்குப் பிறகுதான் உயிரினங்கள் உலகில் தோன்றி இருக்கக் கூடும் என்பது ஆய்வாளரின் முடிவு, இன்றும் மிகக் குளிர்ந்த பனிபடு துருவங்களில் உயிரினம் வாழ முடியாத நிலையினைக் காண்கின்றோம். சிலர் பனிபடு காலத்திலேயே உயிரினம் வாழ்ந்ததெனவும் மனிதனைப் போன்ற உருவமும் அக்காலத்தில் இருந்ததெனவும் கூறுவர். இந்த உயிரினத் தோற்ற வளர்ச்சி எல்லையின் இறுதியே மனித உருவம். ஒரு சிலர் நெடுங்காலத்துக்கு முன்பு மனிதன் இல்லையாயினும் மனிதனைப் போன்ற உருவங்கள் உலவின என்பர்.[2] 30,000 ஆண்டுகளுக்கு


  1. Maa Makes Himself by Garden Childe
  2. The Biography of Earth, by George Gomow
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/75&oldid=1357398" இலிருந்து மீள்விக்கப்பட்டது