பக்கம்:தமிழக வரலாறு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழக வரலாறு


முன் வாழ்ந்த மனிதனது எலும்புக் கூடுகளும் இன்று கிடைக்கின்றனவாம்.[1]

இந்தப் பனிபடு காலத்திற்கு நெடுநாள்களுக்குப் பின்னரே பழைய கற்காலம், செப்புக்காலம், எலும்புக் காலம், இரும்புக்காலம், புதுக் கற்காலம் முதலிய வரலாற்றுக் காலங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கழிந்தன. புதுக் கற்கால எல்லை கி. மு. 12,000 முதல் 5,000 வரையாகும். இந்தக் காலத்துக்கு முன்பே நாகரிகம் என்பது என்ன என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள் என்பர் வெல்ஸ். எனவே, கி. மு. 50,000க்கும் 12,000க்கும் இடையில் கழிந்த காலங்களைப்பற்றி ஓரளவு கண்டு மேலே செல்லலாம்.

அந்தக் காலத்தில் எத்தனையோ உயிரினங்கள் தோன்றி வளர்ந்த போதிலும், மனிதன் அவற்றினின்று தனிப்பட்டவனாகிச் சிறந்தான். இந்த உயிர்த் தோற்றத்தைப் பற்றி பலர் ஆராய்ந்தனர். உயிர் வகைகள் மனிதனுக்கு நெடுந்தொலைவில் செல்லச் செல்ல அதிகமான முட்டைகள் இட்டுப் பெரும்பாலன அழிவு பெற, வாழ்வன சிலவேயாயின. ஒரு கருவில் பல ஆயிரம் தோன்றி அழியும் மீனினத்துக்கும், ஒரு கருவில் ஒரே உயிர் தோன்றும் மனித இனத்துக்கும் வேறுபாடுகள் உள. மீனினம் ஒரு கருவில் 6000,000, முதல் 28,000.000 வரை முட்டைகள் இடுமாம். ஆனால் அத்தனையும் குஞ்சுகளாகி மீனென நீந்தத் தலைப்பட்டிருந்தால். கடல் என்றோ வற்றி, எங்கும் மீன் எலும்புகளே நிறைந்திருக்கும். அப்பெரிய எண்ணில் பிழைக்கும் கணக்கு 14,000,000க்கு ஒன்று வீதமேயாகும். வேறு சில உயிரினங்கள் நூற்றுக்கு ஒன்று வீதமே பிழைத்து வாழ்-


  1. A Short History of the World by H. G. Wells
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/76&oldid=1357406" இலிருந்து மீள்விக்கப்பட்டது