பக்கம்:தமிழக வரலாறு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

77


ஆயுதம், ஆபரணம் முதலியவற்றையும் தேடிக்கொள்ள நினைத்து, சிறுகச்சிறுக வெற்றியும் கண்டிருப்பான். அந்த வெற்றியின் ஒவ்வொரு படியின் எல்லையே காலக் கூறுபாடாய் அமைந்துள்ளது. அவன் கற்களைத் தன் துணைக் கருவிகளாக உபயோகித்ததைக் கற்காலமெனவும், செம்பை உபயோகித்ததைச் செம்புக் காலமெனவும் இரும்பை உபயோகித்ததை இரும்புக் காலமெனவும் வரலாற்று ஆசிரியர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். தன் வாழ்வுக்குத் தேவையான பொருள்களைப் பெற அவன் உபயோகித்த உலோகப் பொருள்களே வரலாற்று எல்லைக் கற்களாய் அமைந்துள்ளன. மனிதன் மிகப் பழைய காலந்தொட்டே மட்பாண்டம் செய்வதில் சிறந்திருந்தான். மட்பாண்டங்கள் செய்யக் கற்றுக் கொண்ட காலமும் மனித வாழ்வில் ஒரு முக்கிய மாறுபாட்டுக் காலமாகும். இன்றைய உலகத்தின் தொன்மை வரலாற்றைக் காண விரும்பும் வரலாற்று ஆசிரியர்கள் இந்த மட்பாண்டங்களாகிய தாழிகளையே துணையாக நாடுவார்கள். சிந்து வெளி நாகரிக மட்பாண்டங்களும், அவற்றில் தீட்டப் பெற்ற நிறங்களும், திருநெல்வேலிக்கு அருகில் கிடைத்த தாழிகளும், பிற நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட தாழிகளும், எத்தனை எத்தனை வரலாறுகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன !

இவை மட்டுமன்றி, இன்னும் எத்தனையோ வகைகளில் நாளுக்கு நாள் தேவை கருதி மனிதன் தன் வாழ்வை மாற்றியும், திருத்தியும், பிற வகையிலும் வேறுபடுத்தியும் அமைத்துக் கொண்டான். கடல்மேல் சிறு படகு கொண்டு அதைக் கடக்க நினைத்த காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/79&oldid=1357429" இலிருந்து மீள்விக்கப்பட்டது