பக்கம்:தமிழக வரலாறு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

95


வாழத் தேடிய இந்த இன உணர்வு இப்படி அந்தக் கூட்டு வாழ்வை வேரறுக்கவே பயன்படுகிறதே!’ என்று நைந்து வாடுவான்.

மனிதனது கூட்டு வாழ்வில் நாகரிகம் முளைத்தது. வெற்று உணவை மட்டும் கருதிய மனிதன் மானத்தோடு வாழவும் விரும்பினான். அதனால், உடை தேவைப்பட்டது. விலங்குகளின் தோல்களையும் மரப்பட்டைகளையும் கட்டிக் கொண்டு வாழ்ந்த நிலை போய், பட்டினும் பஞ்சினும் ஆடை நெய்யக் கற்றுக் கொண்டான் அவன். சிந்துவெளி நாகரிகத்தின் மூலம் கி. மு. 3000த் திலேயே பஞ்சு ஆடை வழக்கத்தில் இருந்தது என்பது தெரிகிறது. அதனுடன் அக்காலத்தில் பொன் நனைகளும் பிற ஆடம்பரப் பொருள்களுங்கூட வழக்கத்தில் இருந்தன என அறிகிறோம். ஆடை மட்டுமன்றிச் சித்திரக் கலை முதலியனவும் அந்தக் காலத்திற்கு முன்னரே தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். சுமேரியரின் கலைச் சித்திரம் கி. மு. 3000க்கு முன் இருந்தது என்பர் வரலாற்றாளர். விலங்கைப் போல வாழ்ந்த மனிதன், இப்படி நாள் செல்லச் செல்ல ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி அடையலானான். பருவ காலங்களையும் அக்காலங்களில் பெய்யும் மழை, அதன் வழிப் பெருகும் பெருவெள்ளம் இவற்றின் கணக்குகளையும் கொண்டு ஆண்டும் திங்களுமாகிய கால எல்லைகளைக் கணக்கிடவும் கற்றுக் கொண்டான் மனிதன். பருவகாலங்களும், பருவ மழையும் தமிழ் நாட்டுக்குத் தனிச்சிறப்பாய் அமைந்துள்ளன. அவற்றைக் கொண்டு அன்றைய மனிதன் கால எல்லையைக் கணக்கிட்டான். கிரேக்க ரோம நாடுகளில் கி.மு. 4236லோ அன்றி 2776லோ இந்த ஆண்டுக் கணக்கினைத் (The actual

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/87&oldid=1357482" இலிருந்து மீள்விக்கப்பட்டது